பெண்களின் முடி அலங்காரத்தில் புதுமைகளை புகுத்தி, குட்டை முடி ஸ்டைலை அறிமுகப்படுத்திய ஹேர் ஸ்டைலிஸ்ட் (Hair Stylist) விடால் சூசன் மரணமடைந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கடந்த 1960ஆம்
ஆண்டுகளில்...,
ஆண்டுகளில்...,
பெண்களின் முடி அலங்காரம் பெரும் பிரச்னையாக இருந்தது. சுருள் சுருளாக, அடர்த்தியாக, நீளமாக இருந்ததால் பல பெண்கள் ஈவ்டீசிங் போன்ற பிரச்னைகளுக்கு ஆளானார்கள். அப்போது புதிய ஸ்டைலில் பெண்களுக்கு முடி அலங்காரம் செய்து உலகளவில் பிரபலமானவர் விடால் சசூன்.
இவர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் பிறந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் குடியேறியவர். இவர், வாஷ் அண்ட் வியர் என்ற ஸ்லோகத்துடன் பெண்களுக்கு புதுமையான ஸ்டைலில் முடி அலங்காரம் செய்ய தொடங்கினார்.
பெண்களின் கூந்தலில் சிக்கு எடுத்து, நீளமான முடியை குட்டையாக வெட்டி கழுத்து வரைக்கும் இருக்கும் அளவுக்கு அலங்காரம் செய்து கொடுத்தார்.
இந்த அலங்காரத்தில் தலைமுடியை பராமரிப்பது பெண்களுக்கு மிக எளிதாக இருந்தது. இது பெண்ணுரிமை இயக்கங்களால் பெரும் வரவேற்பு பெற்றது. பிரபல பேஷன் டிசைனர் மேரி குவான்ட் என்பவரும் விடாலிடம் முடி அலங்காரம் செய்து கொண்டார்.
டிசைனர் மேரி தான் குட்டை பாவாடை(மினி ஸ்கர்ட்), குட்டை பேன்ட்(ஹாட் பேன்ட்) போன்ற ஆடைகளை பெண்களுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர். இன்று வரை பெண்கள் இந்த ஆடைகளை அணிந்து வருகின்றனர்.
அதேபோல் விடாலின் குட்டை முடி அலங்காரமும் இன்று வரை தொடர்கிறது.முடி அலங்காரம் மட்டுமன்றி தனது பெயரில் பல ஷாம்புகள், அழகு சாதன பொருட்களையும் விடால் அறிமுகப்படுத்தினார்.
உலகளவில் பெண்களின் முடி அலங்காரத்தில் புரட்சியை ஏற்படுத்திய விடால், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. அவரது உடலுக்கு பேஷன், மொடலிங் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக