ஐயேலிதா அன்ட்ரே என்பவள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரைச் சேர்ந்த ஐந்தே வயதான சிறுமி. ஆனால் தனது ஓவியங்கள் மூலம் 100 000 பவுண்ட்ஸுகளுக்கும் அதிகமாக சம்பாதித்து சாதனை படைத்து வருகின்றாள். இவளுக்கு 2 வயதான போதிலிருந்தே மாடர்ன் ஆர்ட் வரைவதில்
ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதை ஊக்குவித்த அவளது பெற்றோர்களின்
ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதை ஊக்குவித்த அவளது பெற்றோர்களின்
உதவியுடன் இவள் வளரத்தொடங்கியதிலிருந்து மாடர்ன் ஆர்ட் வரைவதை ஒரு தொழிலாகவே மாற்றி செய்து வருகின்றாள்.
இவள் வரைந்த மிகக் குறைந்த விலையுடைய ஓவியங்களே 3000 பவுண்டுகள் பெறுமதி வாய்ந்தவை. தனது ஓவியத் திறமை மேலும் மெருகேற இவள் வரையும் ஓவியங்களுக்கு விலையும் அதிகரித்தது. இதுவரை இந்த ஓவியங்களை விற்றதன் மூலம் சம்பாதித்த தொகையான ஒரு லட்சம் பவுண்டுகள் ஓவியம் வரைவதை ஒரு தொழிலாகக் கொண்டிருப்பவ்ர்கள் பலர் தங்கள் ஆயுள் காலத்தில் சம்பாதித்த தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது,
இவளது தாய் ரஷ்ய நாட்டையும் தந்தை அவுஸ்திரேலியாவையும் சேர்ந்தவர்கள். மேலும் இவர்கள் தங்கள் மகள் உழைத்த பணத்தை அவர்கள் கொண்டு நடத்தும் டிரஸ்ட்டில் முதலீடு செய்துள்ளனர். இச்சிறுமியின் ஓவியங்கள் ஏற்கனவே இரு கண்காட்சிகளில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜூனில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள மிகப் பெரிய ஓவியக் கண்காட்சி ஒன்றிலும் இவை இடம் பெறவுள்ளன
0 கருத்து:
கருத்துரையிடுக