தாயின் கொடூர முகம் ஒன்று இங்கே வெளியில் வருகின்றது பாருங்கள்.12 வயது மகளை மொட்டை அடித்து வீட்டுக்கு வெளியில் அரை நிர்வாணமாக ஓட விட்ட தாயும், அத்தாயின் காதலனும் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
சிறுமி பரீட்சையில் சிறந்த புள்ளி பெற தவறியமையால் இத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் அரையில் ஒரு துண்டும், மார்பில் ஒரு மறைப்பும் மாத்திரம் அணிய அனுமதிக்கப்பட்டு வீட்டுக்கு வெளியில் ஓட விடப்பட்டார்.
வீட்டுக்குள் வர அனுமதிக்க வேண்டும் என்று இவர் அழுது குழறி இரந்து கேட்டபோதிலும் தாயின் மனமோ, தாயின் காதலனின் மனமோ இரங்கவில்லை.
சிறுமி அரைநிர்வாண கோலத்தில் ஓடுகின்றமையை சுமார் 50 பேர் வரை நின்று வேடிக்கை பார்த்தனர். அரை மணித்தியாலங்களுக்கு மேல் சிறுமி அரை நிர்வாண கோலத்தில் வெளியில் நின்றிருக்கின்றார்.
அயலவர் ஒருவர் தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு அழைப்பு விடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரும் வரை இது நீடித்தது. சிறுமியின் தாயையும், தாயின் காதலனையும் பொலிஸார் கைது செய்தனர்.
குறைந்த புள்ளிகள் பெறுகின்ற பட்சத்தில் இத்தண்டனை வழங்கப்படுமென மகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர் என்றும் இது பெற்றோரின் தீர்மானம் என்றும் பெற்றோரின் தீர்மானத்தில் பொலிஸார் தலையிட முடியாது என்றும் இருவரும் சிரித்துக் கொண்டே கூறி இருக்கின்றனர். இவர்களுக்கு பொலிஸின் தலையீடு ஏன்? என்பது விளங்கவே இல்லை.
இருவரும் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். சிறுமியின் தாய்க்கு வயது 38. தாயின் காதலனுக்கு வயது 34. சிறுமியும், சிறுமியின் மூன்று இளைய சகோதரர்களும் பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக