இது துபாயில் நடந்த ஒரு கொடுமையான உண்மைச் சம்பவம்.குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரை போல் நடித்த நபர் ஒருவர் காருக்குள் வைத்து இளம் யுவதியை கற்பழித்தமை தொடர்பான வழக்கு டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று
வருகின்றது.
வருகின்றது.
குற்றம் சாட்டப்பட்டு இருப்பவர் உள்நாட்டுக்காரர். வயது 31. குற்றப் புலனாய்வுப் பொலிஸாரை போல் நடித்து பிலிப்பைன்ஸ் நாட்டவரான 27 வயது யுவதியை மிரட்டி காரில் அழைத்துச் சென்று செக்ஸ் வைத்து இருக்கின்றார்.
யுவதி எழுதுவினைஞராக வேலை பார்ப்பவர். கடந்த ஜனவரி 27 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்று இருக்கின்றது. யுவதி ஒழுங்கான முறையில் ஆடைகள் அணிந்து இருக்கவில்லை என்றும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விடுவார் என்றும் வதிவிட கட்டிட தொகுதிக்கு அருகில் வழி மறித்து இவர் மிரட்டி இருக்கின்றார். யுவதி பயந்து விட்டார். பின் பொலிஸ் நிலையத்துக்கு என்று சொல்லி மாலை நேரம் வந்து யுவதியை காரில் கொண்டு போய் இருக்கின்றார் ஆசாமி.
கார்த் தரிப்பிடம் ஒன்றின் ஊடாக கார் பயணித்தது. யுவதியிடம் தன்னினச் சேர்க்கையாளரா? கன்னி கழிந்தவரா? என்றெல்லாம் சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்டு இருக்கின்றார். இவர் பொலிஸ் நிலையத்துக்கு யுவதியை கொண்டு செல்லவில்லை. கார்த் தரிப்பிடத்தின் மிக இருண்ட பகுதியை வந்தடைந்தார்.
விபரம் கேட்டபோது பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்கின்ற பட்சத்தில் யுவதியை நாடு கடத்தி விடுவார் என்றும் பல பிரச்சினைகளை யுவதிக்கு ஏற்படுத்துவார் என்றும் சொல்லி இருக்கின்றார். யுவதியை வைத்தியசாலைக்கு கொண்டு போய் கன்னித் தன்மையை சோதிப்பார் என்றும் கன்னி கழிந்தவராக இருக்கின்ற பட்சத்தில் நாடு கடத்தி விடுவார் என்றும் மிரட்டி இருக்கின்றார்.
யுவதி அச்சத்தின் உச்சத்துக்கு போய் விட்டார். அழ தொடங்கி விட்டார். விட்டு விட சொல்லி இரந்து கெஞ்சினார்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் கன்னித் தன்மையை பரிசோதிக்கப் போகின்றார் என்று ஆசாமி சொல்லி இருக்கின்றார். காரின் பின் ஆசனத்துக்கு செல்ல சொல்லி கேட்டு இருக்கின்றார். யுவதியும் முன் ஆசனத்தில் இருந்து குதித்து பின் ஆசனத்தில் அமர்ந்தார்.
யுவதியின் ஆடைகளை களைய சொல்லி கேட்டு இருக்கின்றார். ஆசாமியும் சுயம் ஆடைகளை களைந்து கொண்டார். யுவதியுடன் செக்ஸ் வைத்தார். எல்லாம் முடிந்த பின் யுவதியை கொண்டு வந்து கட்டிட தொகுதிக்கு அருகில் சேர்த்தார். ஒருவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.
யுவதி அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நெருங்கிய நண்பி ஒருத்தி திருப்ப திருப்ப வற்புறுத்தி கேட்டபோது கற்பழிக்கப்பட்டமையை வைகறை பொழுதில் சொல்லி இருக்கின்றார். தொடர்ந்து இருவரும் காலையில் பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிட்டனர்.
இது தொடர்பான வழக்கில் யுவதியின் சாட்சியத்தை தொடர்ந்து யுவதிக்கு ஆதரவாக மேற்சொன்ன நண்பியும் வாக்குமூலம் வழங்கினர். அடையாள அணிவகுப்பில் இருவராலும் ஆசாமி சரியாக அடையாளம் காண்பிக்கப்பட்டார்.
நீதிமன்றம் இவ்வழக்கை எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக