புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இன்றைய நவநாகரீக, விஞ்ஞான முன்னேற்றம் தீவிரமாக உள்ள நிலையில் நீதிபதிகளே இப்படியான தண்டனைகளை வழங்குவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.சவூதி அரேபியாவில் 13 வயதுச் சிறுமி மீது சூனிய வித்தையை பிரயோகித்தார் என்கிற குற்றச்சாட்டில் இலங்கைப்
பெண் ஒருவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு எழுதப்பட்டு உள்ளது.

ஜெத்தாவில் உள்ள ஷொப்பிங் சென்ரர் ஒன்றில் இலங்கைப் பெண்ணுக்கு அணித்தாக நின்றபோது சிறுமியின் நடத்தையில் திடீர் விபரீதம் ஏற்பட்டு இருக்கின்றது. இலங்கைப் பெண் மகளை இலக்கு வைத்து ஏதோ சுலோகங்களை சொன்னார் என்று சிறுமியின் தந்தை பொலிஸாருக்கு முறையிட்டார். பொலிஸார் இலங்கைப் பெண்ணை கைது செய்து உள்ளனர்.

இஸ்லாமிய சட்டங்களால் ஆளப்படுகின்ற சவூதி அரேபியாவில் சூனியம், மந்திரம் ஆகியவற்றை பிரயோகித்தல் மரண தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.இலங்கைப் பெண் தப்பிப் பிழைப்பாரா? என்பது கேள்விக்குறிதான். இவரை காப்பாற்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் பலவும் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்து இருக்கின்ற நிலைமையை காட்டுகின்ற வகையில் எடுக்கப்பட்டு இருக்கின்ற பிரசார வீடியோ ஒன்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top