கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் 18வது மாடியில் இருந்து விழுந்து மாலைதீவு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து விரிவான
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு பிரஜை தற்கொலை செய்து கொண்டாரா? தவறி விழுந்தாரா? என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மாடியில் இருந்து உயிரிழந்த மாலைதீவு பிரஜை தங்கியிருந்த ஹோட்டலில் மேலும் சில மாலைதீவு பிரஜைகள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹோட்டலில் தங்கியிருந்த இவர்களைப் பார்ப்பதற்கு நேற்று இரவு இரு ரஸ்ய நாட்டு பெண்களும் இலங்கைப் பெண்ணும் வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக