புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வடமேற்கு அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவின் லாஸ் செயட்ரோல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய விமானம் ஒன்று திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்தாண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி அத்து மீறி நுழைந்த சிறிய விமானம்
ஒன்றை, வலுக்கட்டாயமான தரை இறக்கி லாஸ் செயட்ரோல் விமான நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.

ஆனால் இந்த விமானம் தற்போது திடீரென காணாமல் போய் விட்டது. துப்பாக்கி ஏந்தி வந்த ஒரு மர்மக்கும்பல் திருடிச் சென்று விட்டது. திருட்டை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் துப்பாக்கியால் சுட்டும் பலனில்லை.

விமானத்தை திருடியவர்கள் எங்கே கொண்டு சென்றார்கள் என்பதை இன்று வர கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விமானத்தை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

இது குறித்து மத்திய அமெரிக்க நாடுகளுக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top