புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் 7-மாத கர்ப்பிணி பெண் ஒருவரை வலுக்கட்டயமாக இழுத்துச்சென்று கருக்கலைப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலகில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனவே அங்கு, தம்பதிகள் ஒரு குழந்தை
மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது.

ஒருவேளை 2-வது குழந்தை பெற்றுக்கொள்வதாக இருந்தால் அதற்கு பெரிய அளவில் சீன அரசிற்கு அபராதம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் சீனாவின் ஷான்சி மாகாணத்தை சேர்ந்த பெங்ஜியாமி என்ற பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருந்தது.

இந்நிலையில் 2-வதாக கர்ப்பம் தரித்த அவர் அபராதம் செலுத்த வில்லை. இதன் காரணமாக 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவரை கட்டாயப்படுத்தி வைத்தியசாலைக்கு இழுத்து சென்று கருக்கலைப்பு செய்தனர்.

அவரை வைத்தியசாலைக்கு இழுத்து சென்றதையும், கருக்கலைப்பு செய்ததையும் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த சம்பவம், சீனா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top