ஆலங்குளம் அருகே உள்ள கீழ்கரும்புலியூத்து கிராமத்தை சேர்ந்தவர் உய்காட்டான் என்ற நவமணி. இவரது மனைவி சொர்ணம் (வயது32). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.கடந்த 1 1/2 ஆண்டாக உய்காட்டான் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி
தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த மனைவி சொர்ணத்தை, நவமணி கத்தியால் சரமாரியாக குத்தினார்.
தாயின் அலறல் சத்தம் கேட்டு குழந்தைகள் எழுந்தனர். உடனே நவமணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். படுகாயம் அடைந்த சொர்ணம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சொர்ணம் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
தப்பி ஓடிய சைகோ கொலையாளி நவமணியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இன்று காலை நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக