புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிசில் தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகச் சந்தேகப்படும் காவல்துறையினர் அவரது கணவரைக் கைது செய்துள்ளனர்.கடந்த மாத இறுதிப் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்தப் பெண்ணின் உடலம் இந்த மாதம் 2ஆம் நாள்
யெனிவாவில் (Geneva) உள்ள றோன் (Rhone) ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் பிரான்சின் பிரசாவுரிமை பெற்றவர் எனவும் யெனீவாவில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்தவர் என்றும் சுவிசிலுள்ள யேர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிப் பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றன.

மனைவியை கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்திருப்பதாகவும் அதனை பிள்ளைகள் கதவின் துவாரம் வழியாகப் பார்த்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவைச் சேர்ந்த கணவனை பாசலில்(Basel) வைத்துக் கைது செய்துள்ள யெனீவா காவல்துறையினர் சாம் டொலோன் (Champ-Dollon) சிறையில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக மற்றொரு தமிழரை சுவிச்சர்லாந்து காவல்துறையினர் தேடி வருவதுடன் குறித்த நபர் கொலைக்கு அல்லது கொலையின் பின்னர் உடலத்தை ஆற்றில் வீசுவதற்கு உதவி செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top