கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சத் தோப்பு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (வயது 60). ஆட்டு வியாபாரி. நேற்று முன்தினம் மாலையில் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் மீது ஏறி மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அந்த மரத்தின் அருகே ஜென்கிஸ் கான்(38) என்பவரது வீடு
உள்ளது. அவரது மனைவி வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நெல்சன் தான் குளிப்பதை எட்டி பார்ப்பதாக கூறி ஜென்கிஸ்கானின் மனைவி அலறியபடி வெளியே வந்தார்.
இதையறிந்த ஜென்கிஸ்கான் நெல்சனை விரட்டி சென்று சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நெல்சன் இறந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து ஜென்கிஸ்கானை கைது செய்தனர்.
அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நெல்சன் எனது மனைவி குளிப்பதை எட்டிப் பார்த்தார். இதனால் எனது மனைவி அலறியபடி ஓடிவந்து நடந்த சம்பவத்தை கூறினார். இதனால் ஆத்திர மடைந்த நான் நெல்சனை அடித்தேன். இதில் அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் ஜென்கிஸ்கானை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
0 கருத்து:
கருத்துரையிடுக