சீனாவைச் சேர்ந்த விவசாயி செங் குவாங்மிங் என்பவர், 2 ஆண்டுகளாக ரிக்ஷா(Rickshaw) பயணத்தின் மூலம் லண்டனை சென்றடைந்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பயணம், 16 நாடுகளை கடந்து 2 ஆண்டுகள் கழித்து தற்போது லண்டன் வந்தடைந்துள்ளது.
இது குறித்து செங் குவாங்மிங் கூறுகையில், எனது வாழ்நாளில் இதுவரையில் சீனா தவிர வேறெங்கும் நான் சென்றதில்லை.
தடகளப் போட்டியின் பெரும் ஆதரவாளர் நான். ஒலிம்பிக் போட்டிகளின் பெருமையை உலகமெங்கும் பரப்பும் விதமாக இந்த பயணத்தை நான் மேற்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக