பிரான்சில் பர்தா அணிந்து வந்த பெண்ணை, முக்காட்டை விலக்குமாறு கூறிய பொலிஸ் அதிகாரியை நால்வர் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில்
முஸ்லிம் பெண்களின் பர்தாவை விலக்கச் சொன்னால், தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும் என்ற சட்டம் கடந்த 2010ஆம் ஆண்டு பிரான்சில் இயற்றப்பட்டது.
அதன் படி கடந்த 25ஆம் திகதி மார்செய்ல்ஸ் நகரில் முகத்தைக் காட்ட மறுத்த முஸ்லிம் பெண்ணையும், அவளோடு நின்ற நால்வரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பின் தலைமை பொலிஸ் அதிகாரி எச்சரித்து பின்பு இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையான இந்த நால்வரும் திரும்பவும் பொலிஸ் அதிகாரிகளை தாக்கக் கூடும் என்ற அச்சம் இருந்து வருகிறது. ரமலான் மாதமாக இருப்பதால் அவர்களை எச்சரித்து விட்டுவிட்டாலும் இத்துடன் இந்தப் பிரச்னை ஓய்ந்துவிட்டதாக பொலிஸ் அதிகாரிகள் கருதவில்லை.
காவலர் தொழிற்சங்கத்தின் தலைவரான டேவிட் ஓலிவியர் ரெவர்டி கூறுகையில், இந்த நால்வரின் நடவடிக்கையால் நாங்கள் அதிர்ந்து போய் இருக்கிறோம் என்றார்.
மேலும் மார்செய்ல்ஸ் நகரத்தில் துப்பாக்கிச் சூடும், வன்முறையும் மிகவும் சாதாரணம். உள்ளூர் பொலிஸ் அதிகாரிகளுக்கும், நகர் மக்களுக்கும் இடையே நல்லுறவு இல்லை. இந்நிலையில் இந்த நான்கு பேரையும் எச்சரித்து விட்டுவிட்டது காவலருக்குக் கலக்கத்தை உண்டுபண்ணுவதாகத் தெரிவித்தார்.
பிரான்ஸ் சட்டப்படி முஸ்லிம் பெண்கள் முகத்தை காட்ட மறுத்தால் 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். முகத்தைக் காட்டக் கூடாது என்று ஒருவரை அடுத்தவர் தடுத்தால் 30,000 யூரோ அபராதமும், ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.
0 கருத்து:
கருத்துரையிடுக