ஜேர்மனியில் பெர்லின் மாகாணத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் புகை எச்சரிக்கை மணியை பொருத்த வேண்டும் என்ற சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சியினரும் முழு ஆதரவு தெரிவித்தனர். கடந்த ஆட்சியில் இத்திட்டம் முன்மொழியப்பட்ட
போது இதனை ஆளுங்கட்சியான இடது சாரியினர் வரவேற்கவில்லை.
ஆனால் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் உடோ உல்ஃப் இதுபற்றி கூறுகையில், இந்தத் திட்டம் தங்களால் தோல்வியடையவில்லை என்றார்.
இத்திட்டம் விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றப் போவது உறுதி, ஆனால் இதற்குப் பணம் கொடுப்பவர் யார் வீட்டு உரிமையாளரா? வீட்டில் குடியிருப்பவரா அல்லது இருவருமா? என்று கேள்வியை எழுப்பினார்.
மேலும் கட்டிடம் கட்டும் போது இக்கருவியைப் பொருத்த வேண்டும் என்று புதுச்சட்டம் கொண்டுவரப்படுமா அல்லது குடியிருப்போரின் உரிமையாகக் கருதப்படுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
ஒரு கருவியின் விலை வெறும் 25 யூரோ தான் என்றாலும், நகரிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் பொருத்த முந்நூறு மில்லியன் யூரோ ஆகும். மேலும் ஒரு வீட்டில் ஒரே ஒரு கருவி மட்டும் பொருத்தினால் பயனில்லை. ஒவ்வொரு அறையிலும், கூடத்திலும், படிக்கட்டுப் பகுதியிலும், தாழ்வாரத்திலும் பொருத்த வேண்டும்.
ஜேர்மனியில் உள்ள 16 மாகாணங்களில், ஏற்கெனவே 10 மாகாணத்தில் இக்கருவி பொருத்துவது கட்டாயமாகிவிட்டது.
தலைநகரான பெர்லினில் ஆண்டுதோறும் சுமார் 30 பேர் தீ விபத்தால் கருகி பலியாகின்றனர். இவர்களில் பலர் இரவு நேரங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் போது இவ்விபத்தைச் சந்தித்துள்ளனர். தீப்பிடித்துக் கருகி இறந்தவர்களை விட புகையால் மூச்சுத்திணறி இறந்தவர்களே அதிகம்.
0 கருத்து:
கருத்துரையிடுக