மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் மனைவியின் தலையை வெட்டி கொலை செய்துவிட்டு, தலைமறைவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படும் கணவரான சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளதாக வாகரைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ. பி. ஜெயசீலன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜுன் மாதம் 30ஆம் திகதி வெருகல் கல்லறுப்பு பிரதேசத்தில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் வெட்டிக் கொலை செய்ததாகக் தெரிவிக்கப்படும் இச்சந்தேக நபர் கடந்த இரண்டு வாரங்களாக காட்டுப்பகுதியில் தலை மறைவாகியிருந்துள்ளார்.
இந்நிலையில், தமக்கு கிடைத்த தகவலையடுத்து இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக