புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சேலம் நகரில் உள்ள  கொண்டலாம்பட்டி, தாணாங்கரடு பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவர் சிமெண்ட் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா (வவயது-38). இவர் கொண்டலாம்பட்டி அருகில் உள்ள சோப்பு கம்பெனிக்கு கூலி வேலைக்கு சென்று
வந்துள்ளார்.

இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் ரம்யா, வயது-13, ஆறாம் வகுப்பு படிக்கும் கீர்த்தனா,வயது-11, இரண்டாம் வகுப்பு படிக்கும் ராஜேஷ், வயது-7, ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கூலி வேலைக்கு செல்லும் சுலோச்சனா தனது கூலியிளிருந்து மாதமாதம் ஒரு தொகையை சீட்டு கட்டுவதற்கு கொடுத்தது வந்தார். இந்த வாரம் சீட்டுக்கு பணம் குறைவாக தருவதாக செங்கோடன் குற்றம் சாட்டியதால், நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று பள்ளி விடுமுறை என்பதால், குழந்தைகள் மூவரும் பள்ளிக்கு செல்லாமல், வீட்டில் இருந்துள்ளனர். செங்கோடன் வேலைக்கு சென்ற பின்பும், சுலோச்சனா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

நேற்று மதியம் சிறுவன் ராஜேஷ் விளையாட சென்ற சமயத்தில், ரம்யா, கீர்த்தனா ஆகியோரை தனது சேலை யில், தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு, சுலோச் சனாவும் தூக்குபோட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

அப்போது, வெளியில் விளையாட சென்ற சிறுவன் ராஜேஷ் வீட்டிற்குள் வந்துள்ளான்.  அவனையும், வேறு ஒரு சேலையின் தலைப்பில் சுருக்கு மாட்டி தூக்கி கட்டிவிட்டு, பிறகு  சுலோச்சனா தானும் தூக்கு தற்கொலை செய்துள்ளார்.

இதில் சிறுவன் ராஜேஷ், தூக்கி கட்டப்பட்ட இடத்தின் கீழே அவனது காலடியில் இருந்த தண்ணீர் டிரம்மில் அவன் கால் வைத்ததால், சுருக்கு கழுத்தை இருக்காமல் இருந்ததால் அவன் மட்டும்  உயிர் தப்பிவிட்டான். என்ன செய்வது என்று  தெரியாமல் தூக்கு கயிற்றை கழுத்தில் வைத்துக்கொண்டே சத்தம் போட்து கத்தியுள்ளான் ராஜேஷ்.

சிறுவனின் அழுகை சப்தம் கேட்டு, அருகில் உள்ளவர்கள் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி, சிறுவனை காப்பாற்றியுள்ளனர். இதில் சிறுவன் ராஜேஷ் கழுத்தில் ஏற்ப்பட லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

சுலோச்சனா மற்றும் அவரது குழந்தைகள் ரம்யா, கீர்த்தனா ஆகியோர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சங்ககிரி டி.எஸ்.பி., ராமசாமி, கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top