நிலவில் முதன் முதலாக 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி கால் பதித்த அமெரிக்காவின் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங் தனது 82ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை மாலை காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நீல் ஆம்ஸ்ரோங், நேற்று இயற்கை மரணம் எய்தியதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இவரது இழப்பிற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட உலகின் முன்னணி தலைவர்கள் பலரும் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துள்ளனர்.
1969ம் ஆண்டில், ரஷ்ய விஞ்ஞானிகள் நிலவுக்கு விண்கலத்தை செலுத்தவிருந்தவேளையில், திடீரென அமெரிக்கா தான் விண்கலத்தை செலுத்தியதாகவும் அதில் நீல் ஆம்ஸ்ரோங் சென்றதாகவும் தெரிவித்தது. இதனை அடுத்து ரஷ்யா தான் செலுத்தவிருந்த விண்கலத்தை நிறுத்திக்கொண்டது. நீல் ஆம்ஸ்ரோங் உண்மையாகவே நிலவில் தரையிறங்கினாரா என்ற சந்தேகங்கள் இன்னமும் பரவலாக இருக்கிறது. காரணம் அமெரிக்கா வெளியிட்ட புகைப்படம் தான் ! நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் அமெரிக்க கொடியை நாட்டுவதுபோல அமைந்துள்ள அப்புகைப்படத்தில் 3 கொடியின் நிழல்கள் காணப்படுகிறது. நிலவில் ஒரு பொருளை நட்டால், அதன் நிழல் ஒன்றாகத் தான் தெரியும். காரனம் சூரிய ஒளி. 3 சூரியன் இருந்தால் தான் 3 நிழல் தோன்றும். எனவே இதனை வைத்து பலர், நீல் ஆம்ஸ்ரோங் நிலவுக்குச் செல்லவில்லை என்று வாதிடுகின்றனர்.
ஆனால் அவர் அமெரிக்க விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து திரும்பியதாகவும் சொல்லப்படுகிறதே தவிர, அவர் நிலவில் காலடி பதிக்கவில்லை என்று பலராலும் வாதிடப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக