இந்தியாவில் நாமக்கல் அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியராக சத்தியபிரபு (32) பணிபுரிந்து வந்தார். இவர், பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை செக்ஸ்டார்ச்சர் செய்து வந்தார். ஆசிரியரின் மோசமான செயல் பாட்டை கண்டித்து பெற் றோர்கள் கடந்த ஜூன் 25ம் தேதி பள்ளி முன்,
போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து சத்தியபிரபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இவரை ஆசிரியர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் அருள்மொழிதேவி உத்தர விட்டுள்ளார்.
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்வதுடன், அவர்க ளின் கல்வி தகுதியையும் ரத்து செய்ய வேண்டும் என கடந்த ஜூன் மாத இறுதியில் தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவு முதன் முதலாக தற்போது அமுல்படுத்தப் பட்டு ஆசிரியர் சத்தியபிரபு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல்லை அடுத்த புதன்சந்தை சிவன் மலைகரடு பகுதியை சேர்ந்த சத்தியபிரபு எம்.ஏ, எம்.பில் (ஆங்கி லம்) படித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக பணி நியமனம் பெற்று தர்மபுரி மாவட்டம் அரூர் யூனியன் கொலாப்பாறை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி யில் பணி யில் சேர்ந்துள்ளார். இரு ஆண்டுக்கு பிறகு அங்கி ருந்து இட மாறுதல் மூலம் சொந்த மாவட்டமான நாமக்கல் லுக்கு வந்துள்ளார்.
சத்தியபிரபுவின் கல்வித்தகுதி ரத்து குறித்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் அருள்மொழி தேவி கூறுகையில், தற்போது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தொடக்கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்த பிறகு அந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படும் என்றார்.
சேந்தமங்கலம் உதவி தொடக்கல்வி அலுவலகத்தில் தான் சத்தியபிரபுவின் சர்வீஸ்ரெஜிஸ்டர் தற் போது மெயின்டைன் செய்யப்படுகிறது. பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படும் போது மீண்டும் அவர் அரசு வேலைக்கு சேர முடியாத படி பட்டபடிப்பு சான்றித ழில் குறிப்பு எழுதிய பிறகே சம்பந்தப்பட்டவரி டம் உயர் அதிகாரிகள் ஒப்ப டைப்பார்கள்.
தற்போது கல்விதகுதியே ரத்து செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் இதற்கான வழி காட்டும் நெறிமுறைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவல கம் காத்திருக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக