புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



கள்ளக்காதல் விவகாரத்தில், நபரொருவரின் நாக்கை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் துண்டித்த சம்பவமொன்று பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரின் கிழக்கில் உள்ள ஒகாரா மாவட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள மிர்சாபூர் கிராமத்தில் சிகையலரங்கார நிலையமொன்றினை நடத்தி வருபவர் யூசுப்கான் (32).

இவருக்கும் அக்கிராமத்தில் உள்ள செல்வாக்கான குடும்பமொன்றைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அக்குடும்பத்தினர் யூசுப்கானை கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் அவருடைய கண்களை தோண்டி எடுத்தனர். ஆத்திரம் அடங்காமல், காது, மூக்கு, உதடு, நாக்கு ஆகிய உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி வீசினர். இரத்த வெள்ளத்தில் துடித்த யூசுப்கானை ஒதுக்குப்புறமான இடத்தில் போட்டு விட்டு சென்றனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வரும் யூசுப்கானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளன்ர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top