வடபகுதியில் தவறான பாலியல் உறவுகள் என சொற்களால் வரையறை செய்யப்படும் பாலியல் நடவடிக்கைகளின் விகிதம் அதிகரித்துள்ளது அனைவராலும் கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றதே தவிர அதனை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கான நடவடிக்கைகள் பெரும்பாலும் எடுக்கப்படவில்லை
என்றே தோன்றுகின்றது.
இருபாலாரும் சேர்ந்தே பாலியல் ரீதியில் தவறுகள் மேற்கொள்வது என்றாலும் அதன் விளைவு முற்று முழுதாகப் பெண்களையே சென்றடைகின்றது.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை பெண்களின் பாலியல் பாதிப்பின் ஒரு முக்கிய கட்டமாகத் உள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தவறான உறவுகள் மற்றும் சட்டவிரோத பாலியல் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை மூடி மறைப்பதற்கும் அவற்றை வெளியே கொண்டு வந்து தெரிவிப்பவர்களுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கும் முயலும் சிலர் அவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு முயற்சிக்காது அவற்றை மூடிமறைக்கின்றனர்.
இவ்வாறான முட்டாள் தனமான செயல் தவறு செய்பவர்களுக்கும் தவறு செய்ய நினைப்பவர்களுக்கும் ஊக்கத்தைத் கொடுக்குமே தவரி வேறோன்றும் இல்லை. “சிவாஜி” படத்தில் நல்ல பெண் எடுப்பதென்றால் யாழ்ப்பாணத்தில் போய் எடுக்க வேண்டும் என்று சொன்னதை கேட்டு புலகாகிதம் அடைந்தேன்.
அப்படியான யாழ்ப்பாணத்தில் ஒரு சில சம்பவங்களை காட்டி கேவலப்படுத்த போகின்றீர்களா..? எனக் கேட்டு எமது ஊடகவியலாளர் ஒருவருடன் சண்டையிட்ட பிரபலமானவரின் மகன் தற்போது என்ன நிலையில் உள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம். தனது மகன் வெளிநாட்டில் உள்ள சகோதரியால் வாங்கிக் கொடுக்கப்பட்ட “லப்ரொப்” கணனியில் ஆபாசப் படம் பார்ப்பதை நேரில் கண்டு கத்தியதால் ஏற்பட்ட விரக்தியிலும் அவமானத்தாலும் அவரது மகன் தற்கொலைக்கு முயன்ற விடயத்தையும் தற்போது அவரது மகனின் நிலையையும் நினைத்து கவலைப்படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியாது.
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையின் 13 வயது மாணவி ஆபாசப்படம் பார்த்தார். வயதுக்கு வருவதற்கு முதலே ஆபாசப் படம் பார்த்து ‘பிஞ்சில் பழுத்த வேலை’ செய்த மாணவியும் அவளது நண்பிகளைப் பற்றியும் நாம் சிறிது காலத்திற்கு முன் எமது செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
நாம் அவ்வாறு செய்தி வெளியிட்ட போது குறிப்பிட்ட மாணவியின் வீட்டுக்கு அருகில் இருந்த 21 வயது இளைஞனை மாணவியின் உறவினர்கள் செய்தியை எமது இணையத்தளத்திற்கு கொடுத்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்குவதற்கு முயன்றுள்ளனர். தமது மகளை சரிவர கண்கானிக்கத் தெரியாத குறிப்பிட்ட பெற்றோரின் இவ்வாறான முட்டாள் தனமான செயல்கள் மீண்டும் மகளுக்கு இவவாறான நடவடிக்கைக்கு ஓர் புத்துணர்வை ஏற்படுத்தும் என கருதலாம்.
இன்ரநெட் கபேகளில் நடந்தேறும் கூத்துக்கள்
யாழ் நகரப் பகுதியில் உள்ள இன்டநெற் கபே ஒன்று குறிப்பிட்ட கணனிகள் இரண்டுக்கு மிகுந்த பாதுகாப்புடன் கூடிய மறைவுகள் கொடுத்து பராமரித்து காதலர்களுக்கும் கள்ளக் காதலர்களுக்கும் உடந்தையாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடைகளில் வேலை பார்க்கும் சில இளைஞர்களும் மற்றும் யாழ் நகரப்பகுதி வர்த்தக நிலையங்கள் , புடைவைக்கடைகளில் வேலை பார்ப்பவர்களும் இங்கு தமக்கான நேரத்தை ஒதுக்கி ஜோடியாக இருப்பதாகத் எமக்குத் தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக நாம் அக்கடைக்குள் சென்ற போது அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்குள் எம்மை அனுமதிக்கவில்லை. அத்துடன் எமது சட்டைப் பையின் மேல் இருந்த தொலைபேசியைப் பறிப்பதற்கு முயற்சி செய்தார்கள். இருந்தும் எம்முடன் சேர்ந்து வந்த இன்னும் சிலரும் சேர்ந்து அவர்களை அடக்கி விட்டு உள்ளே சென்று பார்த்த போது அங்கே தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்பதற்கு வந்திருந்த 17 வயது சிறுமியும் நகை கடையில் வேலை பார்க்கும் இளைஞனும் அலங்கோல நிலையில் இருந்தனர்.
மற்றைய கணனி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவருடன் அரச திணைக்களத்தில் பணிபுரியும் சாரதியும் ஒன்றாக இருந்தார்கள்.
தற்போது இன்ரநெற் கபே இவ் இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் உள்ள இன்ரநெற் சென்றர்கள் திறந்த நிலையில் கணனிகளை வைத்திருப்பது அவர்களுக்கும் அங்கு சென்று இன்ரநெற் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கும் மிகுந்த கௌரவத்தைக் கொடுக்கும் என்பது நாம் சொல்லிப் புரிவதில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக