புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தன் உடல் எடையை பெருமளவு குறைத்து இயக்குனர் விஷ்ணுவர்தனை அஜித்குமார் பிரமிக்க வைத்திருக்கிறார்.பில்லா படத்திற்கு பிறகு புதிய படமொன்றில் அஜித்குமாருடன் விஷ்ணுவர்தன் இணைந்து பணியாற்றி வருகின்றார்.இப்படத்தில் அஜித், மிகவும் இளமையாக தெரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன்காரணமாக உடல் எடையை குறைக்க முடிவு செய்தார்.


இதற்காக அஜித் வெறும் 15 நாட்களேயே எடுத்துக்கொண்டுள்ளார். தினமும் 6 மணி நேரம் உடற்பயிற்சி நிலையத்தில் கடுமையாக பயிற்சி செய்த அஜித், 15 நாட்களுக்கு பின்பு விஷ்ணுவை சந்தித்திருக்கிறார்.

அப்போது தன் திரைக்கதைக்கு தகுந்தாற்போல அஜித் உடல் எடையை குறைத்து வந்திருக்கிறார் என விஷ்ணுவர்தனுக்கு ஒரே ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விஷ்ணுவர்தன், சினிமா துறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்தும் அஜித்தின் ஈடுபாடு என்னை பிரமிக்க வைத்தது. 15 நாட்களுக்குள் உடல் எடையை குறைத்து வருகிறேன் என்று கூறியவர், தன்னுடைய வார்த்தையை காப்பற்றி விட்டார் என்றார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அவரே இப்படத்திற்கு உதவி இயக்குனராகவும் பணியாற்றுகின்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top