தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தன்னைவிட 17 வயது மூத்த வாலிபருடனான காதலை கைவிட மறுத்த தங்கையின் கழுத்தை கத்தியால் அறுத்து அண்ணன் கொலை செய்தார்.தூத்துக்குடிமாவட்டம் புதியம்புத்தூர், சாமிநத்தம் செல்லப்பா மகள் கனகசுமதி,18; பிளஸ் 2 முடித்துள்ளார். இவருக்கும், இவரது வீட்டருகே
ஒன்றரை ஆண்டிற்கு முன் குடிவந்த, தனியார் மின் உற்பத்தி நிலைய டிராக்டர் டிரைவர் சங்கரன்கோவில் மாரிச்சாமிக்கும்,35, காதல் மலர்ந்தது. இதை, கனகசுமதி வீட்டார் கண்டித்ததால் பிரச்னை ஏற்பட்டது. ஆறு மாதத்திற்குமுன் மாரிச்சாமி வீட்டை காலி செய்து சங்கரன்கோவில் சென்றுவிட்டார். ஆயினும், அவர்களது காதல் மொபைல்போன் மூலம் தொடர்ந்தது.
இந்நிலையில், கனகசுமதி மூத்த அண்ணன் செல்வக்குமார்,32, உடல்நலக்குறைவு காரணமாக, நேற்றுமுன்தினம் காலை ஊரிலிருந்து குடும்பத்தாருடன் புதியம்புத்தூர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கனகசுமதி, பஸ்சில் சங்கரன்கோவில் சென்று மாரிச்சாமியை சந்தித்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய செல்வக்குமார்,கனகசுமதி, காதலனை சந்திக்கச் சென்றுள்ளதை, அவரிடம் மொபைல் போனில் பேசி உறுதிசெய்தார்.
நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பிய கனகசுமதிக்கு, செல்வக்குமார் அறிவுரை கூறினார். அவரைவிட 17 வயது மூத்த மாரிச்சாமியுடனான காதலை கைவிடுமாறும், இதனால், குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால், அதை கனகசுமதி ஏற்றுக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த செல்வக்குமார், நள்ளிரவில் கத்தியால் தங்கை கனகசுமதியின் கழுத்தை அறுத்தார். இதில்,கனகசுமதி பலியானார். செல்வக்குமாரை, புதியம்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக