புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்புணர்ந்த தந்தை குறித்த தகவல்கள் கொழும்பு நீதிமன்றில் நேற்றுமுன்தினம்  (23) நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது வெளியாகியுள்ளன.

கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் வசித்துவந்த ஜோர்தான் பிரஜையான இந்த நபர் இலங்கைப் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

ஜோர்தானுக்கு தொழில்வாய்ப்பைப் பெற்றுச் சென்ற பெண்ணைச் சந்தித்த குறித்த நபர், இலங்கைப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இந்த நபர் கடந்த சில வருடங்களாக இலங்கையில் தங்கியிருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தையொன்றும் இருக்கிறது.

தந்தை வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னர் குழந்தைத் தூக்கிக் கொண்டு பறவைகளைக் காண்பிப்பதற்காக மேல் மாடிக்குச் சென்றுவிடுவார். பின்னர் கீழ் மாடிக்கு வந்து குழந்தையை நீராட்டுவதைத் தந்தை வழக்கமாகக் கொண்டுள்ளார். அநேக நாட்கள் தந்தை இவ்வாறு நடந்துகொள்வதை தாய் அவதானித்துள்ளார்.

அண்மையில் குழந்தையைப் பரிசோதனை செய்த தாய், குழந்தையின் கீழ் பாகத்தில், அசாதாரணமான காயங்களும், சீறல் காயங்களும் இருப்பதை அவதானித்துள்ளார். இதனால் சந்தேகம் கொண்ட தாய், தந்தையிடம் கேள்வியெழுப்பிய போதிலும் அவர் மெளனமாக இருந்துள்ளார்.

ஒருநாள், ‘இந்தப் பறவைகளைக் காண்பிக்கும் விளையாட்டு” என்னவெனப் பார்ப்பதற்கு குழந்தையின் தாய் இரகசியமாக மேல் மாடிக்குச் சென்றுள்ளார். மேல் மாடியிலுள்ள (balcony) ஒதுக்குப்புறமொன்றில் வைத்து குழந்தையை தந்தை பாலியல் வன்புணர்ந்த காட்சியை தாய் கண்டுள்ளார்.

உடனடியாக செயல்பட்ட தாய், கிராண்ட்பாஸ் காவல்துறையினரைத் தொடர்புகொண்டு இதுகுறித்து முறையிட்டுள்ளார். வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் தந்தையை உடனடியாக கைதுசெய்தனர்.

ஜோர்தான் நபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதன்பின்னர் அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.








0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top