புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு





வெள்ளவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான 28 வயதுடைய பிரஷான் குமாரசுவாமி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் பலியான தம்பதிகளின் மகனான 28 வயதான பிரஷான் குமாரசுவாமி இன்று முற்பகல் 10.45 அளவில் கைது செய்யப்பட்டார்.

அவர் கொழும்பிலிருந்து – குருணாகலை நோக்கி தனியார் பேருந்து ஒன்றில் அவர் பயணித்த தருணத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் செயற்பட்டதன் காரணமாகவே அவர்
கடவத்தை பொலிஸாரிடம் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரஸ்தாப நபரை அடையாளம் கண்ட பயணி ஒருவர் வழங்கிய இரகசிய தகவலையடுத்தே கடவத்தைப் பகுதியில் அவரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top