புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சம்பவங்கள் குறித்து தற்போது அடிக்கடி பேசப்படுகிறது.பார்வையுள்ளவர்கள் மட்டுமல்ல, பார்வையற்றவர்களும் இவ்வாறான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர் என்பது பியகமயில் நடந்த சம்பவத்தின் மூலம் அறிய
முடிகிறது. குறித்த பார்வையற்ற நபர் பட்டதாரி ஆசிரியராவார்.

பியகம பிரதேச பெண்கள் பாடசாலையொன்றில் 10 ஆம் தர மாணவிகளுக்கு கற்பித்த குறித்த ஆசிரியர், கற்பித்தலின் போது தனக்கு உதவிபுரியும் மாணவிகளை இதற்கு பயன்படுத்தியுள்ளார். பாட முடிவில் தனக்கு உதவி செய்த மாணவிகளை ஆசிரியர்களுக்கான ஓய்வு அறை தவிர்ந்த ஏனைய இடங்களுக்கு அழைத்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் ஆட்கள் நடமாட்டமற்ற இடங்களில் வைத்த மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவங்கள் பல தடவைகள் நிகழ்ந்த போதிலும் அவமானம் காரணமாக பாடசாலை நிர்வாகத்திடமோ அல்லது பெற்றோரிடமும் குறித்த மாணவிகள் முறையிட்டிருக்கவில்லை. எனினும் சமீபத்தில் அவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட மாணவியொருவர் இச்சம்பவம் பற்றி பெற்றோருக்குக் கூறியதையடுத்து பெற்றோர் சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிஸார் குறித்த ஆசிரியரை கைது செய்தனர். குறித்த ஆசிரியர் இவ்வாறான ஈனச் செயல்களில் பல தடவைகள் ஈடுபட்டமை விசாரணைகளையடுத்து தெரியவந்துள்ளது. நான்கு பாடசாலை மாணவிகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற கைது செய்யப்பட்டு மஹர நீதிமன்றில் நிறுத்தப்பட்ட குறித்த ஆசிரியரை விளக்கமறயலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பியகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் ஏழு வருடங்களுக்கு முன்னர் பட்டதாரி ஆசிரியர் நியமத்தின் குறித்த பாடசாலையில் இணைந்து கொண்டார்.
இவர் தொடர்பில் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top