புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள கம்பாத் என்ற கிராமத்தில் உள்ள ஓர் வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசில் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் மிர்பகரையும் அங்கிருந்த 2 பெண்களையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அங்கிருந்த ஆண் மற்றும் ஒரு பெண்ணின்
உடைகளை வலுக்கட்டாயமாக கழற்றி நிர்வாணமாக்கினர். மற்றொரு பெண்ணை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் 3 பேரையும் கிராம தெருக்களிலும் அவர்களை போலீசார் இழுத்து சென்றனர்.

அந்த காட்சியை போலீசாரும் உள்ளூர் மக்களும் படம் எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் இன்டர்நெட்ல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து தகவல் பரவியதும், சம்பந்தப்பட்ட 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்ல போலீசார் முயற்சித்த போது, உள்ளூர் பெண்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் அவர்களை போலீசார் மிரட்டி விரட்டி அடித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top