கல்கிஸ்ஸை - சுமனாராம வீதியில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை கல்கிஸ்ஸை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று மாலை இவ்விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது நிலையத்தை இயக்கி வந்ததாகக் கூறப்படும் ஆண் ஒருவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் கம்புருகல, களுத்துறை, கட்டுபிலகொல்ல மற்றும் வஸ்கொன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
0 கருத்து:
கருத்துரையிடுக