புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் பாப்பா, 65. இவர், நேற்று காலை, 11 மணிக்கு, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், ஏ.டி. ஸ்.பி.,யிடம் ஒரு புகார் கொடுத்தார்.
புகாரில் அவர் கூறியிருப்பதாவது:எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் மொட்டையன், மகாதானபுரத்தில், துப்புரவு பணியாளராக வேலை
செய்கிறான். திருமணமானதும், கரூர் மாவட்டம், லாலாப்பேட்டையில் வசிக்கிறான்; இரண்டு மகள்கள் உள்ளனர்.ஐந்து ஆண்டுகளுக்கு முன், மொட்டையன் மனைவி இறந்து விட்டாள். மூத்த மகள் மணிமேகலைக்குத் திருமணமாகி விட்டது. இரண்டாவது மகள் மகாலட்சுமி, 12, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னுடன் வசித்து வந்தாள்.கோவில் திருவிழாவுக்காக, கடந்த 13ம் தேதி, மகாலட்சுமியை, லாலாப்பேட்டை அழைத்துச் சென்றேன். அன்று காலையே கோவிலுக்குச் சென்றோம். சிறிது நேரத்தில், மகாலட்சுமி வீடு திரும்பினாள். நான், 2.15 மணிக்கு, வீடு திரும்பினேன். வீட்டில் இருந்த, மொட்டையன், வேகமாக வெளியே ஓடினான். உள்ளே சென்று பார்த்தபோது, ஆடைகள் கலைந்து, மல்லாந்த நிலையில், என் பேத்தி மகாலட்சுமி இறந்து கிடந்தாள்.ஊருக்கு விஷயம் தெரிந்தது. கோவில் திருவிழா என்பதால், ஊர் பெரியவர்கள், மகாலட்சுமியின் உடலை எரித்து விட வேண்டும் எனக் கூறியதால், அவள் உடலை எரித்து விட்டோம்.தற்போது தலைமறைவாக உள்ள மொட்டையன் தான், தன் மகள் மகாலட்சுமியைக் கற்பழித்து கொன்றுள்ளான்; அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top