புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருத்தணி ஆர்.கே.பேட்டை அடுத்த சிங்கசமுத்திரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கர்,27. இவருக்கும், திருப்பதியைச் சேர்ந்த ரேவதி,24, என்பவருக்கும் இடையே, ஆறு ஆண்டு களுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களுக்கு, சவுதிகா,5, என்ற மகள் உள்ளாள். இவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு முன், ரேவதியின் தாய் வீடான திருப்பதிக்குச் சென்று, குடும்பம் நடத்தி வந்தனர்.



 மாமியார் வீட்டில் தங்கி, குடும்பம் நடத்த பாஸ்கருக்கு பிடிக்கவில்லை. கடந்த மாதம் தனது சொந்த கிராமத்துக்கு திரும்பி வந்துவிட்டார்.

நான்கு நாட்களுக்கு முன் திருப்பதி சென்ற பாஸ்கர், தனது வீட்டுக்கு வருமாறு மனைவியை அழைத்தார். இதற்கு ரேவதி மறுத்தார். இதையடுத்து, தனது மகள் சவுதிகாவை மட்டும் அழைத்துக்கொண்டு, சிங்கசமுத்திரம் வந்தார். மனைவி வர மறுத்ததால், ஆத்திரத்தில் இருந்த பாஸ்கர், 14ம் தேதி பகல், 2 மணிக்கு, வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில், மகள் சவுதிகாவை அழுத்தி கொலை செய்தார். பின் தானும் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

இதையறிந்த கிராம மக்கள் அவரை காப்பாற்றினர். இதையடுத்து, மறுநாள் காலை, சவுதிகாவின் உடலை கிராம சுடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டார். இந்நிலையில், சிறுமியின் சாவில் மர்மம் உள்ளதாக, கிராம நிர்வாக அலுவலர் ஜோதிராமலிங்கம், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, போலீசார் பாஸ்கரை கைது செய்து, விசாரணை செய்தனர். அப்போது போலீசாரிடம் பாஸ்கர் அளித்த வாக்குமூலத்தில், "மாமியார் வீட்டில் தங்குவது எனக்கு பிடிக்கவில்லை.

இதனால், என் மனைவியை, என்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். "நீ வராவிட்டால் நானும், மகளும் தற்கொலை செய்துகொள்வோம்,'' என, நான் கூறியும் அவள் வர மறுத்ததால், மகளை அழைத்துக்கொண்டு, என் வீட்டுக்கு வந்தேன். இங்கு, 14ம் தேதி தண்ணீரில் அமுக்கி மகளை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். அதன்படி, மகளை கொலை செய்தேன். அடுத்து, நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது, கிராம மக்கள் காப்பாற்றிவிட்டனர்' எனக் கூறிஉள்ளார்.

 இதையடுத்து நேற்று மாலை, 4 மணிக்கு சிறுமியின் உடலை, பள்ளிப்பட்டு தாசில்தார் மாணிக்கம் முன்னிலையில் தோண்டி எடுத்து, அதே இடத்தில் திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top