புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி வடமாகாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் யாழ்ப்பாண மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.


நாளாந்தம் தமிழக மீனவர்களால் பெருந்தொகையான மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக யாழ்ப்பாண மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன் கிழமை தங்கச்சிமடத்தில் இருந்து வந்த நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களின் தொடர்சியான இந்த நடவடிக்கை காரணமாக, தங்களுடைய கடல்வளம் அழிவதாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தங்களுக்கு உரிய நியாயம் பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 20 ஆயிரம்குடும்பங்கள் வரையில் கடற்தொழிலை நம்பி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top