தேனி அருகே உள்ள அல்லிநகரம் வள்ளிநகரில் ஆரோக்கியசாமி காம்பவுண்டு உள்ளது. இங்கு 12-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்கி உள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் திருநங்கைகளிடம் பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது
.
வாலிபர்கள் தொல்லை அதிகரித்ததால் அவர்கள் கலெக்டர் பழனிச்சாமி, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சில வாலிபர்கள் திருநங்கைகளை கேலி-கிண்டல் செய்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த திருநங்கைகள் சுவாதி (வயது24), கனகா (30), ஸ்டெல்லா (22), தாமரை (25) ஆகியோர் பூச்சி மருந்தை குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
இதனை பார்த்த மற்ற திருநங்கைகள் கூச்சல் போட்டு அலறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் மயங்கி கிடந்த 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பரபரப்பு பாலியல் கொடுமையால் திருநங்கைகள் விஷம் குடித்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக