புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நேற்று நாடெங்கிலும் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு சமுகமளிக்க வேண்டிய மாணவன் நித்திரையிலேயே உயிரிழந்த பரிதாபமான சம்பவமொன்று அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் சம்மாந்துறை முழுவதும்
பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்மாந்துறை சென்னெல் சாஹிராவில் கல்வி கற்ற முகம்மட் இஸ்மாயில் ஆசிக் (19)  எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கருவாட்டுக்கல் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இம்மாணவன் நேற்று முன்தினம் மாலை நோன்பு துறந்ததும் உணவருந்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார்.

மறுநாள் அதிகாலை நோன்பு பிடிப்பதற்காக இம்மாணவனை எழுப்பிய போதே அவர் இறந்திருந்தது தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகள் பொலிஸ் புலனாய்வு பொறுப்பதிகாரி அமரசிறி, பொலிஸ் பரிசோதகர் காதர் ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள் உணவு ஒவ்வாமை காரணமாகவே இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top