புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது மகள் கறுப்பின ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பெற்றோர், கோபத்தில் இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இங்கிலாந்தின் சுவன்சீ பகுதியைச் சேர்ந்தவர்கள் டேவிட் மற்றும் பிரான்செஸ் சாம்பியன். இவர்களது மகள் ஜானே
சாம்பியன்(வயது 17).

இவர் தனது கறுப்பின ஆண் நண்பரான அப்லோன்ஸ் க்யூப்வுடன் உணவகம் ஒன்றில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தனர்.

இதை தங்கள் குடும்பத்திற்கு அவமானமாக கருதிய தம்பதியர், இருவரையும் கையால் குத்தியும் அடித்தும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அந்த கறுப்பின வாலிபரின் பெற்றோர்கள் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜானே சாம்பியனின் தந்தைக்கு 12 மாதங்களும், தாய்க்கு 9 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மது அருந்திவிட்டு குடிபோதையில் அவ்வாறு செய்ததாக குற்றத்தை ஒத்துக் கொண்ட அவர்கள், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top