புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வீட்டில் ஒரு வாரம் குழந்தையை தனியாக விட்டு விட்டு, தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தி ஆனந்தமாக இருந்த இளம் தாய் ஒருவருக்கு 15 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் உள்ள பிரெகன் நகரைச் சேர்ந்தவர் டாலி. 20 வயதேயான அவர்
திருமணமாகாமலேயே பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.இந்நிலையில் அவர் தனது 15 மாத குழந்தையை சுமார் ஒரு வார காலமாக வீட்டில் தனியாக விட்டுவிட்டு தனது தோழிகள் வீட்டுக்கு சென்று மது அருந்தி ஆனந்தமாக இருந்துள்ளார்.

அந்த ஒரு வாரமும் அவர் ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வந்து குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு அதை இருட்டான அறையில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.இங்கிலாந்தின் நடுக்கும் குளிரில் அந்த குழந்தை இருந்த அறையில் ஹீட்டர் கூட இயங்கவில்லை. இருட்டில் இருந்த குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.பொலிசார் வந்து வீட்டுக்குள் புகுந்தபோது வீடு முழுவதும் அழுக்குத் துணி, காலி பீர் பாட்டில்கள், அழுக்கான டயப்பர்கள் ஆங்காங்கே கிடந்துள்ளது.பின்னர் பொலிசார் குழந்தையை மீட்டு, சாப்பாடு கொடுத்துள்ளனர், குழந்தையின் தாய் டாலியை கைது செய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு குழந்தையை கவனிக்காத குற்றத்திற்காக 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top