புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மனியில் Spandau என்ற Gatow பகுதியில் (Gatow area of Spandau) வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகனள துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.குடும்ப பிரச்சனை காரணமாக 28 வயதுடைய தனது மனைவியையும், ஆறு மற்றும் மூன்று வயதுடைய இரண்டு
மகன்களையும் கொலை செய்துள்ளார். குடும்பத்தினரை கொலை செய்வதற்கு முன் பெர்லின் நகரில் உள்ள மருத்துவமனையில் தனது ஒரு வயதுடைய பெண் குழந்தையை சேர்த்துள்ளார்.

குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் போது பொலிசார் இவரை கைது செய்துள்ளனர். இது பற்றி ஜேர்மன் பொலிசார் கூறுகையில், கடன் பிரச்சனை காரணமாக இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும் இவர் மனைவியை அடிக்கும் பழக்கமுடையராகவும் குழந்தைகள் மீது அதிக பாசம் உடையவராகவும் இருந்திருக்கின்றார். இவரது வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் இவரை கைது செய்துள்ளனர்.

இரண்டு மாடிகளை கொண்ட இவரது வீடு சந்தேகிக்கும் படி சில நாட்களாக மிகவும் அமைதியாக இருந்துள்ளது. மேலும் பல நாட்களாக கார் நகர்த்தப்படாமல் ஒரே இடத்தில் இருந்துள்ளதால் அப்பகுதி மக்கள் இது பற்றி பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top