‘V’ என்ற எழுத்து உலகெங்கும் பிரபலமானது. அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்கள் வரை தங்கள் வெற்றியைக் குறிக்க இந்த எழுத்தைப் போன்ற அடையாளத்தையே இரண்டு விரல்களால் காட்டுகிறார்கள். இந்த எழுத்தில் பெயர் துவங்கினால் திறமைசாலிகளாக இருப்பார்கள். சிறந்த பக்தியாளர்களான இவர்கள்
ஆன்மீக உலகில் கால் வைத்தால் சிறந்த எழுத்தாளர்களாக வருவர். கவிதை, கதை, கட்டுரை மற்றும் கலையுலகில் கால் பதித்து வெற்றி பெறுவர். மனதிற்குள்ளேயே ரகசியத்தை புதைத்து வைப்பதில் மகா கில்லாடிகள். இறக்கும் வரை வெளியே சொல்லமாட்டார்கள். இவர்கள் தங்களுக்காகவோ, பிறரைக் கவிழ்க்கவோ செய்யப் போகும் செயல்களை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து அமைதியாகவே செய்வர். தங்களால் யார் கவிழ்ந்தார்களோ, அவர்களிடமே சென்று ‘இப்படி ஆகி விட்டதாமே’ என்று ஆறுதலும் சொல்லிவிட்டு வந்து விடுவார்கள்.
அப்பாவி போன்ற முகத்தோற்றம் இருந்தாலும், தன்னம்பிக்கை உணர்வுள்ளவர்கள். எதிலும் வெற்றிக்கொடி நாட்டுவர். ஒன்றையே நினைப்பார்கள். சிறப்பாக திட்டமிடுவார்கள். இதில் தோல்வி ஏற்பட்டாலும், ‘போனால் போகட்டும் போடா’ என்று ஒரு பாட்டு பாடிவிட்டு, மீண்டும் அதே வேலையைத் தொடங்கி ஓயமாட்டார்கள். இவர்கள் ஜோசியக்காரர்கள் மாதிரி. நடந்தது, நடப்பது என
புட்டுபுட்டு வைப்பார்கள். இவர்களது கணிப்பு பெரும்பாலும் சரியாகவே அமையும். சிந்தனைவாதிகளான இவர்கள் வேதாந்த கருத்துகளிலும் வல்லவர்கள். இவர்களை உண்மையின் வடிவம் என்றால் மிகையாகாது. நீதித்துறையில் புகுந்தால் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அஞ்சாமல் வாதாடுவார்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். இவர்களை வாழ்க்கைத் துணையாக அடைபவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பணரீதியாகவும், மனரீதியாகவும் ஆறுதலாக இருப்பர். அறிவாளிகளான இவர்கள் செய்யும் செயல்களுக்காக அரசின் பாராட்டையும் பெறுவர். இவர்களிடம் முரட்டு குணமும் அதிகம். யாரையும் எதற்காகவும் கவிழ்க்க தயங்கமாட்டார்கள். பிச்சைக்காரர்களைக் கண்டால் பிடிக்காது. பட்டினி கிடந்தாலும் பிறரிடம் கடன் வாங்கவும் பிடிக்காது. கையேந்திபவன் ஓட்டல்களில் காசு கொடுத்து சாப்பிடுவதைக் கூட கேவலமாக நினைப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
சிக்கனமாக இருப்பார்கள். சேமிப்பை பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்வதில் வல்லவர். கோபம் அடிக்கடி ஏற்படும். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். கசப்பு சுவையை விரும்புவர். கடவுளின் அருள் கடாட்சம் உண்டு. இந்த எழுத்து இவர்களுக்கு பல சிறப்புகளை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கு குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதில் தடை, சகோதர கருத்து வேறுபாடு, கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமை போன்ற பிரச்சனைகள் அடிக்கடி நேரும். ஆனால், எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் தன்மை உள்ளவர்கள் என்பதால் இதுபற்றி கவலைப்பட மாட்டார்கள்.
‘V’ என்ற எழுத்தில் பிறந்த பிரபலங்கள்
என்ற எழுத்தில் பிறந்த பிரபலங்கள்
விவேகானந்தர்
விஜயலட்சுமி பண்டிட் (நேருவின் சகோதரி)
எம்.எல்.வசந்தமாரி (பாடகி)
விஜயகாந்த்
“W ” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்
வெற்றி பெறும் காரியங்களை மட்டும் தன் அறிவாற்றலினால் எடுத்துக்கொண்டு அதிலேயே முனைப்பாக செயல்பட்டு வெற்றிக்கனியை வெகு எளிதில் பெற்றுவிடும் உங்களுக்கு கிடைக்கப் பெற்ற இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் இரு பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளேயே தங்கி விடுவதால் அடிக்கடி ஜலதோசம், தும்மல், இருமல் போன்றவற்றை வாரி வழங்கும், தங்களின் தனி முயற்சியால் முத்திரை பதிக்கும் செயல்களால் பெரும் பெயர் பெறுவீர்கள், காதல் திருமணங்களை செய்து புரட்சிகளை ஏற்படுத்துவீர்கள். எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு முனைப்பு, ஒழுங்குடன் செயல் புரிவதால் ஏற்றத்தை மிக விரைவில் சந்திக்க முடியும். பிரபலங்கள் உங்கள் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பல விதங்களில் நன்மைகள் புரிவர்.
வெள்ளை நிறத்தையும், பச்சை நிறத்தையும் அதிகம் விரும்பும் நீங்கள் வெகுளித்தனமாகவும் இருப்பீர்கள். சிறு வயதிலேயே வீடு, வாகனம், ஆள்பலம் போன்றவற்றை பெற்று அனுபவிப்பீர்கள், பெண்களால் வெகு எளிதில் சுவரப்படுவதை தங்களின் ‘பிளஸ்’ பாயிண்ட் என கருதி வியாதிகளை வரவழைத்துக் கொள்பவர்களும் உண்டு, பெற்றோர்கள் சொல்படி கேட்காதது இவர்களின் ‘மைனஸ்’. இதனால் பல பின்னடைவுகள் உண்டு என்பதை மனதில் கொள்க. பல இடங்களில் இவர்களின் சமயோசித புத்தியால் புகழ்ப்படுவர். எந்த வேண்டாத நிகழ்வுகளையும் தன் மன உறுதியால் விரட்டியடிக்கும் சக்தி பெற்ற இவர்கள் C,G,L,S – ஐ முதல் எழுத்தாக பெயரில் பெற்றவர்களிடம் மட்டும் அடங்கி போய்விடுவர். அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளும் இவர்கள் அரசியலை விட, திரைப்பட துறையில் அதிகம் ஜொலிப்பர். சந்தில் ‘சிந்து’ பாடும் இவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் கடும் கோபம் என்பது வராது. துவங்கும் தொழிலில் முனைப்புடன் செயல்பட்டாலும் அடிக்கடி தொழிலை மாற்றிக்கொள்ளும் சுபாவத்தினால் நிலையில்லா கொள்கையுடையவர் என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது நிலையை விட மேல் நிலையானவர்களே வாழ்வின் துணையாக கிடைப்பர், இருப்பினும் இதைவிட மேலானது எது என மீண்டும் தேடுவதை நிறுத்தினால் நிலையான வாழ்வை நீடித்து அடையலாம். பெரும்பாலும் கலைத்துறையிலும், அரசியலிலும், ஆன்மீகத்திலும், புத்தக வெளியீட்டாளர்களாகவும், மாபெரும் தொழில் அதிபர்களாகவும் அழகு நிலையங்களின் உரிமையாளர்களாகவும், ஏற்றுமதியாளர்களாகவும், ஆபரண கடை முதலாளிகளாகவும், கார், விமானம், கப்பல் பயண அதிபர்களாகவும் திகழ்வது இவர்களின் ஆள் பலத்தை அதிகரிக்க செய்யும். முக்காலத்தையும் தெரிந்து கொள்ள ஆவல் உள்ள இவர்கள் மது, மாது, சூது இந்த மூன்றையும் தவிர்ப்பது நலமாகும். எந்த காரியத்திலும் தன்னலம் நிறைந்து நிற்கும், நீர் மற்றும் காமத்தால் ஏற்படும் நோய்களிலும் மிகுந்த கவனத்துடன் இருப்பது நலம், எப்படியோ வாழ்வை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இந்த ‘வின்’னர்கள்.
Wஎழுத்தில் பிறந்தவர்கள்
வின்ஸ்டன் சர்ச்சில்
`X’ என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா?
நாலா பக்கங்களிலும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வருவதில் அதிக ஆர்வமும், அதைப்போல் செயல்பாடுகளும், பிளான் மனதிற்குள் போடுவதில் வல்லமையும், பிறர் உள் மனதை எளிதில் தெரிந்து கொண்டு அவர்கள் நினைப்பதிற்கேற்ப செயல்புரிந்து அவர்களை வளைத்து போடுவதும், ஜனங்களை வசீகரிக்கும் திறமையும், புகழ் தன்னைத் தேடி வருவது போல் செய்துவிடும் பக்குவமும், எந்த பணியிலிருந்தாலும் அதை தன் சொந்த பணியாக ஏற்றுக்கொள்வதும், பிறர் ஒதுக்கிய காரியங்களை மிக எளிதில் செய்து விரைவாக பணியாற்றுகிறார் என்ற பெயரும், தன்மேல் அதீத நம்பிக்கையும் கொண்ட `X’ என்ற எழுத்தை பெயரில் முதல் எழுத்தாக பெற்ற உங்களுக்கு சூரியக்கதிர்களின் ஒரு புள்ளி குவிப்பு உள்ளேயே இருந்து செயல்படுவதால் கண்களிலும், பேச்சுவன்மையிலும், காதல் கலைகளிலும் நீங்கள் ஒரு ஜாம்பவான்தான்.எந்த இடத்தில் வேலை செய்தாலும் அங்கே உங்கள் சுறுசுறுப்பு பற்றி ஒரு விவாதமே நடந்து கொண்டிருக்கும். மூளையைப் போட்டு கசக்கி கொண்டிருக்கும் இக்கட்டான பணி பற்றிய செய்தி தெரிவித்தால் ப்பூ இவ்வளவுதானா இதோ முடித்து தருகிறேன் என்று மழைக்கு முன் ஏற்படும் `மின்னல்’ போல் பளிச்சென முடித்து ஒரு புன்னகையை வெட்டுவது உங்களால் மட்டும் முடியும். உலக விஷயங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு சான்றோர்களே அறிந்திராத தகவல்களை திரட்டி அவர்களையும் மிரட்டும் உங்களைக் கண்டாலே, நான்தான் பெரியவன் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட மிரள்வது வேடிக்கைதான். அயல் தேசங்களில் சென்று சுற்றித் திரிந்த சுகம் காண்பீர்கள். மடைதிறந்த வெள்ளமென புதுமையான கருத்துக்களும், மதிநுட்பமும், சிந்தனை வேகமும் கிடைத்துக்கொண்டிருப்பது மிகப்பெரிய `கிப்ட்’தான். எங்கு சென்றாலும் உங்களின் அட்வான்ஸ் குணத்தால் அளவிற்கடங்கா நண்பர்கள் சேர்க்கை உண்டு.
சோம்பேறிகளை கண்டால் சுத்தமாக பிடிக்காது. உலகம் அனைவரும் சுபிட்சமாக வாழ ஏதேனும் ஒரு உதவிகளை மனமாற செய்து கொண்டே இருப்பர். கலைநயமும், கருத்தாழம் மிகுந்த பேச்சும், நகைச்சுவை உணர்வும் தங்களின் தரத்தை உயர்த்திக் கொண்டேயிருக்கும். தோல்விகளைக் கண்டு துச்சமாக மதிக்கும் உங்களுக்கு கால் நரம்பு இழுப்பு; கண்களில் உபாதை, பலக்குறைவு, உடல் அசதி போன்றவைகளை நாற்பது வயதிற்கு மேல் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் உணவு கட்டுப்பாடுடன் இருந்து உலகிற்கு மேலும் உதவிடலாம். திடீர், திடீரென திட்டங்களை மாற்றிக்கொள்வது, எந்த செயலிலும் அதிக அவசரம் காட்டுவது, படைத்தவன் நான்முகன் என்றால் `ஐந்து முகன்’ என்று கூறி அடம்பிடிப்பது போன்ற முரண்பட்ட கருத்துக்களை விட்டுவிட்டால் நிச்சயம் நாடு போற்றும் நாயகனாக வலம் வருவது உறுதி வெற்றி வீரர்களே!
“Y” என்ற எழுத்தில் வருபவர்கள் எப்படி இருப்பாரகள்
மற்றவர்களை வழி நடத்தி செல்லும் போக்கும், தனக்கு யாரும் புத்தியை புகட்டக் கூடாது என்பதில் முனைப்பும், புகழில் நாட்டமும், ஒழுங்கும், கட்டுப்பாடும், தான் மிகுந்த சக்தியுடையவன் என அடிக்கடி சொல்லிக் கொள்வதுமான குணத்தையுடைய `Y’என்ற எழுத்திற்குரியவர்களுக்கு சூரியக்கதிர்கள் உட்குவிவதால் `பலான’ விசயதில் சற்று பவர்புல்லானவர்களாக இருப்பது இயல்பு. நேர்மையின் இலக்கணமாக திகழும் இவர்கள் பெண்களுக்கு அடிபணியும் வாய்ப்பு உள்ளது. வாழ்வில் எவ்வளவு முயற்சி செய்தும் உயர்வுகள் என்னவோ இவர்களை விட்டு பயந்து ஓடிக்கொண்டே இருக்கும். கையொப்பமிடும் போது இடதுபுறம் சாய்த்து போடுவதால் வந்த வினை இது.எனவே கையொப்பமிடுவதை `பாசிட்டிவ்’ ஆக மாற்றிக்கொண்வது அவசியம். சில வேலைகளில் முடிவெடுக்க தெரியாமல் இருதலைக் கொள்ளியாக அல்லாடுவதை சரி செய்ய தகுந்த ஆலோசனைகளை C,G,L,S பெயராக கொண்டவர்களை நாடுவது சிறப்பாகும். அடிக்கடி ஜலதோசம், காய்ச்சல், மூட்டுவலிகள் ஏற்படலாம். உணவுக்கட்டுப்பாடுடன் உறவு கொண்டு இதை நிறுத்தி வாழ்வில் உயரலாம்.
`Z’ என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா?
தெய்வீகத்தை தன் தனிக்கொள்கையாக கொண்ட இவர்கள் சொல் எந்த இடத்திலும் சபை ஏற மறுக்கும். காரணம் சூரியக்கதிர்கள் தட்டையான மேற்புரத்தில் தங்க முடியாததுதான். மேலும் கர்வம் கொண்டவர்கள் என்ற இலவச பட்டம் வேறு. மக்களிடம் தகுந்த மரியாதை கொண்ட இர்கள் மதத்தின் பேரில் மலையளவு நம்பிக்கை கொண்டவர்கள். ஆன்மீக கருத்துக்கள் பரப்புவதில் வல்லவர்களாவர். யார் எவ்வளவு புத்திமதி சொன்னாலும் தன் முடிவுப்படி தான் நடப்பர். இவர்களிடம் இருக்கும் உன்னதமான சக்தியைப் பயன்படுத்தி பலபேர் காரியங்களை சாதித்துக் கொண்டு இவர்களை கழட்டி விட்டு விடுவது உண்டு. உழைப்பை உயர்வுடன் கருதும் இவர்களுக்கு வேலை வாய்புகள் மிக குறைவாகவே கிடைக்கும்.இருப்பினும் உணவுக்கு பஞ்சமில்லை. மாயம், மந்திரம், தந்திரம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருப்பர். கடைசி காலங்களில் மகானுக்கு ஒப்ப இவர்கள் பேசப்படுவர். எந்த காரியத்தையும் அவசரப்படாமல் செய்து வெற்றியின் விளிம்பிற்கு கொண்டுவந்து விட்டு அதன்மேல் சலிப்படைந்து வேண்டாம் என ஒதுக்கி தள்ளி நாட்களையும், பொருட்களையும் வீணடிப்பதை தகர்த்து ஒளிவிளக்காய் திகழ எந்தநிலையிலும் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது உயர்வுக்கு வழி தரும்.
0 கருத்து:
கருத்துரையிடுக