பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே பொறுப்புகள் தலைமேல் வந்து வீழ்வதால் குடும்ப சூழ்நிலையை தாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
தீட்டும் திட்டங்கள் அவ்வப்பொழுது தடைபட வாய்ப்புண்டு. ஆனால், இடைவிடாது உழைப்பர். இந்த எழுத்துகளில் பெயர் துவங்குவோர், தொழிற்சாலைகளில் பணிபுரிந்தால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. பிறர் துன்பத்தை தனக்கு வந்தது போல் நினைத்து அவர்களுக்கு உதவுவர். தற்போதைய நிலையை விட உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
அன்பான இவர்களுக்கு அடிக்கடி துன்பங்கள் வந்து ஒரு மகானைப் போன்று மனதை மாற்றிவிடும். அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து தெய்வீகத்தில் அதிகபட்ச நம்பிக்கை அல்லது நம்பிக்கை குறைவு கொண்டவர்களாக இருப்பர். அனைத்து துறையிலும் ஆர்வமாக உழைப்பர். இவர்களிடம் மன உறுதி பெற்றவர்களை நோக்கி நல்ல நேரம் தேடிவரும். எங்கு பணியாற்றினாலும் அங்கு இவர்கள்தான் ஆதிக்கம் பெற்றிவராயிருப்பர். பல பேருக்கு உதவிகரமாக இருக்கும் இவர்களுக்கு, யாவரும் உதவமாட்டார்கள். சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் சென்று பணம் பெறலாம் என்று துர்போதனை கூறும் நண்பர்கள் சில வேளைகளில் மாட்டிக் கொள்வதும் உண்டு.
மனம் ஒரு நிலைப்படாமலும், முடிவெடுக்க முடியாமலும் பல காரியங்கள் சிதைந்து போகலாம். யாருடனும் நெருங்கிய பழகமாட்டார்கள். வண்டி வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி சிக்கல் அல்லது விபத்தில் மாட்டிக் கொள்வர். பொருள் விரையம் அடிக்கடி ஏற்படுவதால் மனம் சஞ்சலமடையும், சாஸ்திர, சம்பிரதாயங்கள் அத்துப்படி, ஆனால், முற்போக்குவாதி போல் தன்னைக் காட்டிக் கொள்வர்.
இரும்பு சம்பந்தமான துறை, மருத்துவம், கிரானைட், சினிமா, எண்ணெய், பெட்ரோல், கெமிக்கல் போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்றவை. இவற்றில் இருந்தால் பெரும் பொருள் சேர்ப்பர். அழகான தோற்றமிருந்தும் இவர்களுக்கு இளவயதில் திருமணம் நடப்பதில்லை. போதை வஸ்துகளுக்கு அடிமையாகும் வாய்ப்பு வெகுவேகமாக கிடைக்கும். கவனம் தேவை.
ஏதேனும் ஒரு காரியத்தை பகீரதப் பிரயத்தனம் செய்து முடித்தவுடன் அடுத்த பிரச்னை தலைதூக்கும். வாழ்வில் இன்பங்களை விட துன்பங்களைக் களைவதற்கே அதிக நேரம் எடுத்துக் கொள்வர். சாதாரண காரியங்களைக் கூட அதிக முயற்சி செய்தால் தான் முடிக்க முடியும். சிறந்த நிர்வாகத் திறமை பெற்ற இவர்களை மற்றவர்கள் கண்டு கொள்வதே இல்லை.
இவர்கள் 8, 17, 26 தேதிகளில் பிறந்திருந்தால், கடும் மன உளைச்சலையும், இளவயதில் பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் போவதும், தொழிலில் இருப்போருக்கு நிர்வாக தொந்தரவுகளுக்கு வழக்குகளும், கல்வித் தடைகளும் ஏற்படலாம். இந்த தேதிகளில் பிறந்த மகான்களுக்கு இது பொருந்தாது.
‘P’ எழுத்தை முதல் எழுத்தாக பெற்றவர்கள்
பிரணாப் முகர்ஜி
பிரியங்கா
பத்மினி
பிரபு
பிரசாந்த்
R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர்,
அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும், தன்னை பேணுதலும், கனிவான பேச்சும், பிரபலங்களை தன் செயற்கையால் மடக்கும் திறனும் இருக்கும். சேவைப் பணிகளில் வலிய முன் வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். கலைகளில் மிகப்பெரிய நாட்டமும், பெண்களின் பேரில் மதிப்பும், மரியாதை யும், குழந்தைகள் மேல் பிரியமும் வைத்திருப்பர்.
நல்ல சிந்தனைவாதியான இவர்களுக்கு நீர் சம்பந்தமான நோய் வரலாம். தீர்க்கமான முடிவுகளை உடனே எடுக்க இயலாது. புதிதாக வருபவர்களை நன்கு உபசரித்து அன்னியோன்யமாகி, உடன்பிறந்தவரைப் போல அன்பை பொழிந்து விடுவர். இயற்கையின் இனிய புத்திரர்களான இவர்கள் பஞ்சபூதங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவர். கலைத் துறை, திரைப்படம், பத்திரிகை, புத்தகம், விவசாயம், அரசுப் பணிகள், ஆன்மீகம் போன்றவைகளால் அதிகமான பொருள் வரவு கிடைக்கும்.
குடும்ப நிகழ்வுகளில் சற்று பட்டும் படாமலும் இருப்பர். உறவினர்களிடம் தன் உள்ளத்து எண்ணங்களை தெரிவிக்க சங்கோஜப்படுவர். அதிக உழைப்பினால் உயர்வுண்டு என்பதை பேச்சில் மட்டுமின்றி செயலிலும் காட்டுவர். பிறர் மனதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவதால் நண்பர்களை அதிகமாக பெற்றிருப்பர். எதுவம் தன்னால் முடியும் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டுவர். பல நண்பர்கள் இவர்களுக்கு உதவ காத்துக்கிடப்பார்கள். சிலருக்கு ஆட்சிக் கட்டிவில் அமரும் வாய்ப்பு கிடைக்கும்.
கண்ணியமான உங்கள் நற்குணத்தால், நாடு போற்றும் அளவிற்கு புகழும், பொருளும் மத்திம வயதில் கிடைக்குமு;. இவர்களிடம் ஆலோசனை கேட்க பெரும் கூட்டமே வரும். ஆனால், இவர்கள்தான் அடுத்தவர் ஆலோசனையை கேட்க மாட்டார்கள். ஆழ்நிலை, தவம், தியானம், மேலுலகு, மருத்துவம், பிரணாயாமம், அமானுஷய சக்தி இவற்றில் மனம் அடிக்கடி லயிக்கும். சிலர் அரசியலில் எதிர்பாராத விதமாக புகுந்து கலக்குவர்.
இவர்களை நம்பியவர்களை ஒருநாளும் கைவிட்டு செல்ல மாட்டார்கள். சாதாரணமாக நடக்க வேண்டியதை கூட, யோசனை என்ற பெயரில் நாட்கணக்கில் கிடப்பில் போட்டு விடுவதுண்டு. இவர்களின் கற்பனையில் உதித்த நிகழ்வுகள், நிஜமாகவே நாட்டில் நடக்கும்பொழுது மிகவும் மகிழ்வார்கள். இவர்களின் உயர்வுக்கு, A,C,I,T ஆகிய முதல் எழுத்தில் பெயர் அமைந்தோர் உறுதுணையாக நிற்பர்.
சப்தமில்லாத பேச்சு, நளினமான நடை, இனிய குரல் வளம், மனிதநேயம் போன்றவைகளால் எங்கும், எப்பொழுதும் இவர்கள் விரும்பப்படுவர். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுடனும், இவ்வெண்ணில் பெயர் எண் அமைந்தோரிடமும் முன் ஜாக்கிரதையாக இருப்பது பின் விளைவுகளை ஏற்படுத்தாமல் பாதுகாத்தக் கொள்ள உதவும். உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்தால் பிரச்னைகளிலிருந்து தப்பலாம்.
இந்த எழுத்தில் பெயர் துவங்கும் பிரபலங்கள்
ராமகிருஷ்ண பரமஹம்சர்
ரமண மகரிஷி
ஈ.வெ. ராமசாமி
எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்)
ரஜினிகாந்த்
“S” என்ற எழுத்தில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்
முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு முன், பின் செல்வதால் இவர்களை யாராலும் அடக்க முடியாது. நேர்மை, நீதி, நியாயத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் இவர்கள் தனக்கென்று வரும்போது ‘விதிவிலங்கு’ கேட்பார்கள். அடிக்கடி கோபம் வரும். ஆனாலும், தன் கீழ் பணிபுரியும் பணியாளர்களை நேயத்துடன் நடத்துவது போல பாசாங்கு செய்வர்.இறைநேயம், வாக்குசுத்தம் இவர்களை மேலோங்கி நிற்க செய்யும். வயது முதிர்ச்சியடைந்தவர்களிடம் மிக மரியாதை யுடன் நடந்து பெயர் பெறுவர். எங்கு சென்றாலும் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டு செல்வமே செயல் படுவர். யானை போன்ற வேகமும், மலை போன்ற குணாதிசயமும் இவர்களை தனித்து காட்டும்.
பூஜை, ஆச்சாரம், அனுஷ;டானம் இவற்றில் அதிக நம்பிக்கையுடைவர்கள். அதே சமயம் பணியில் கடும் சிரத்தையுடன் இருப்பர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ கோயிலுக்கு சென்றால்தான் சாமியா என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வர். ஆனால், இவர்கள் மட்டும் கோயில், குளம் என்று சுற்றித்திரிவர். எதையும் விடாப்பிடியாக முடித்து வெற்றி காண்பர். புகழ்ச்சிக்கு அடிபணிவதால் இவர்களை சிலர் நன்கு பயன்படுத்திக் கொள்வர். மக்கள் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். நாட்டுப்பற்று கொண்டவர்கள்.
வாழ்வில் உயர்வுகள் படிப்படியாக வரும். தனக்கு தீங்கிழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதால், எதிரிகளால் சாமான்யமாக இவர்களை வெல்ல இயலாது. தர்மசீலர்களான இவர்களுக்கு உணவுப்பஞ்சம் இல்லை. தோல் அலர்ஜியாலும், இனிப்பு நோயினாலும், நீர் சம்பந்தமான நோயினாலும் அவதியுறுவர். இதற்கு உணவுக் கட்டுப்பாடே சிறந்த வழியாகும். பல பொது நிறுவனங்களில் கவுரவத் தலைவர்களாக இருந்து நற்காரியங்களால் மக்களை கவரும் இந்த நீதிமான்கள் உடை அணிவதில் தனி கவனம் செலுத்துவர். வெள்ளை நிறத்தை அதிகம் விரும்புவர். சைவ உணவே உயர்ந்தது என்பர். எதிலும் நுட்பத்துடன் செயல்படுவதால் இவர்களிடம் ஆலோசனை கேட்க பிரபலங்கள் கூட தயங்குவதில்லை.
பொருளாதார குறைபாடு அதிகமாக ஏற்படுவதில்லை. யார் பணமாவது புரண்டுகொண்டே இருக்கும். பேச்சினால் யாரையும் இழுக்கும் இவர்கள் ஆன்மிகத்திலும் சாதனை படைப்பர். பொருளாதார துறையிலும், அரசாங்க பெரும்பதவிகளிலும், உணவக துறையிலும், விஞ்ஞானிகளாகவும் மிளிர்வர். காட்டிற்குள் வீடு கட்டி இயற்கையை ரசிப்பதில் ஆர்வமாக இருப்பர். தனித்தன்மையுடைய இவர்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படுவர்.
‘S’ இல் பெயர் துவங்கும் பிரபலங்கள்
சுப்பிரமணிய பாரதி
சத்யஜித்ரே
சஞ்சய்காந்தி
எம்.எஸ். சுப்புலட்சுமி
சிவாஜிகணேசன்
ஸ்ரீதேவி
T’ என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள்
T’ என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு பேரைக் கேட்டு செய்வது நல்லது என்று பேச்சுக்கு சொல்லி வைப்பர். இந்த எழுத்தின் மேல் சூரியக்கதிர்கள் பட்டு இடமும் புறமும் சிதறுவதால், இவர்களால் எதிலும் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடிவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.வெட்டு ஒன்று, துண்டு மூன்று என்று அதிரடியாகப் பேசும் இவர்கள் சமுதாயத்தின் மீதும், இயற்கையின் மீதும் அபரிமிதமான பற்று வைத்திருப்பர். மக்கள் மத்தியில் புதுமை விஷயங்கை பரப்பிக் கொண்டேயிருப்பர. வெளியூர் சென்று வந்தால், அங்குள்ள நிலைமைகளை எல்லாம் விபரமாகத் தெரிந்து வந்து மற்றவர்களிடம் பெருமையடிப்பர். சுதந்திரமாக இருக்க விரும்புவர்கள். யாராக இருந்தாலும் தானாக வலிய முன்வந்து நற்பெயர் பெறுவர். முக்கிய நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கு பெற விரும்புபவர். தானாகவே போய் முன் வரிசையில் அமர்ந்து விடுவர். அது மட்டுமல்ல. அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கவும் உதவி செய்வர். அரசாங்கத்திற்கே ஆலோசனை கூறும் அளவுக்கு இவர்களுக்கு அறிவு அதிகம்.
சரித்திரகால சுவடுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். மேலும், கேள்வி கேட்டு துளைத்துக்கொண்டே இருப்பர். குழந்தைப் பருவதில் அது உளறலாகக் கூட இருக்கும். ஆனால் பிற்காலத்தில் இவர்களுக்கு இதுதான் உரமாக அமைந்து வாழ்வை விருத்தியடையச் செய்யும். அசைபோடுவதிலும், ஆய்வு செய்வதிலும் அலாதி பிரியம் இவர்களுக்கு, திரைப்படத் துறையிலும், அரசியலிலும், அரசு உயர் பதவிகளிலும் அதிக பங்கு கிடைக்கும். இரும்பு, கிரானைட், கெமிக்கல், வக்கீல் தொழில், வானவியல், கார் தொழில்களில் ஜாம்பவனாக இருப்பர்.
நண்பர்கள் இவரைக் கண்டாலே விலகி ஓடுவர். ஆனால், இவர்கள் அவர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு. அவர்களுக்காக செலவழிப்பதை கவுரவமாக எடுத்துக்கொண்டு பணத்தை வாரிவிடுவர். விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் காட்டுவர். வறுத்து, பொரித்த மசால் அயிட்டங்களை விரும்பி உண்பர். அழகு சாதன பொருட்கள் மேல் ஒரு கண் இவர்களுக்கு.
எப்பொழுதும் பரபரப்பும், மிடுக்குமு;, சுறுசுறுப்பும் நிறைந்த இவர்கள் சமூக சேவைக்காக வீட்டையே மறந்துவிடுவதும் உண்டு. யாராவது இவர்களு;ககு உதவி புரிந்தால், அதற்கு மாற்றாக அதிகம் அவர்களுக்குச் செய்ய வேண்டும் என நினைப்பர். தான்தோன்றித்தனமாக நடப்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது.
‘உங்களால் முடியாதது ஏதுமில்லை’ என ஐஸ் வைத்தால் போதும். அந்த புகழ்ச்சி வார்த்தைகளில் மதிமயங்கி, அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வர். நாட்டுப்பற்று மிகுந்த இவர்களால் சமுதாயத்திற்கு அதிக நன்மையே. சற்று பிடிவாதம் அதிகம். விட்டுக்கொடுத்து போனால் வெற்றி மேல் வெற்றிதான்.
‘T’ இல் பெயர் துவங்கும் பிரபலங்கள்
அன்னை தெரசா – சமூக சேவகி
தாமஸ் ஆல்வா எடிசன் – விஞ்ஞானி
திப்புசுல்தான் – மன்னர்
‘U’ என்ற எழுத்தில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே, உலக சுகங்களே சுகங்கள் மற்றையவை எல்லாம் போலித்தனமானவை, என்று கூறும் ‘U’ ன் உள் சூரியக்கதிர்கள் முழுமையாக குவிக்கப்பட்டு உள்ளேயே இருப்பதால் நன்மையும், சில நன்மை குறைவுகளையும் ஏற்படுத் தும். அதிக உஷ்ணத்தை தருவதால் உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. அடிக்கடி நீர் சம்பந்தமான நோய் களை தரலாம் (ஜலதோசம் குளிர்ச்சியாலும், உஷ்ணத்தாலும் வரும்).நடை, உடை, பாவணைகள் சற்று வித்தியாசப்படுத்திக் காட்டும் இவர்களை. அடிக்கடி அயல் தேசங்களுக்கு பயணிக்க வாய்ப்பு தரும். அறுசுவை உணவை விரும்பி உண்ணும் இவர்கள் – கனிவான பேச்சும் – கவர்ச்சியும் கொண்டவர்கள். அழகை ஆராதிக்கும் இவர்கள் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு உடையவர்கள். பிறரிடம் பேசிக்கொண்டே இருப்பர். இதனால் பலர் இவர்களின் விசிறிகளாகி விடுவர். கஷ்டமான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள். உடல் உழைப்பு என்பது மிகக் குறைவுதான். உலகில் வருங்காலத்தில் நடப்பவைகளை உள்ளுணர்வு மூலம் முன்பே தெரிவிப்பர். சாஸ்திர சம்பிர தாயங்களில் விற்பன்னராக இருப்பர். கலைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டு இருக்கும் வேலையை உதறிவிட்டு விடுவர். எந்த வேலையையும் ஆரம்பித்தால் முடிக்காமல் விடமாட்டார்கள். பூலோக சுகங்கள் கிடைத்த வண்ணமிருக்கும். நல்ல மனோதிடம் படைத்த இவர்கள் C, G, L, S போன்ற முதல் எழுத்துடையவர்களிடம் வீண், வம்பு, வழக்குகளுக்கு செல்லாமல் இருந்தால் கோர்ட்டு, வழக்குகள் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். மந்திரம், தந்திரம், மாயாஜாலம் மனதிற்கு பிடித்த விஷயம்.
கல்வியிலும் சிறந்து விளங்கும் இவர்களுக்கு உயர் பதவிகள் பல வந்து சேரும். அவ்வப்பொழுது ஏற்படும் தோல்விகளை துரத்திவிடுவர். இளமை காலங்கள் இனிமையான காலம் என்பர். முதுமை என்பது பேச்சில் கூட பிடிக்காது. திடீரென கோபப்படுவது இவர்களின் எதிரியாகும், இதனால் பல காரியங்கள் பாதியில் நின்றுபோக வாய்ப்புள்ளது. பிறந்த தேதிக்கேற்ப பெயர் எழுத்தான ‘U’ என்ற பாசிடிவ் ஆக துவங்குகிறதா என அவசியம் பார்த்துக் கொள்வதால் பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம். புகழுக்கு அடிபணியும் இவர்கள் யாரையும் பாராட்ட தயங்குவர். முக வசீகரம் படைத்த இவர்களுக்கு மேலும் மேலும் பொலிவேற்ற மேக்கப் போட்டுக் கொள்வது மிகவும் பிடிக்கும். கலைகளை கரைத்து குடித்திருக்கும் இவர்கள் திறமையாக பிழைத்துக் கொள்வர்.
‘U’ இல் பெயர் துவங்கும் பிரபலங்கள்
உஷா உதுப்
உன்னி மேனன்
உன்னி கிருஷ்ணன்
0 கருத்து:
கருத்துரையிடுக