புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என தபால் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தபால் திணைக்களத்தில் பணிபுரியம் அதன் சேவையாளர்களுக்கு பல வருடங்களாகக் காணப்படும் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லை. எனச் சுட்டிக்காட்டியுள்ள என இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜயந்த விஜேசிங்க,

 எனவே அவர்களுக்கான சம்பள உயர்வினை அடுத்த ஆண்டிலாவது வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் நேற்று  கோரிக்கை விடுத்ததாகவும் அதன்படி எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top