பாகிஸ்தான் கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ராப் மீது பாலியல் புகார்களைக் கூறியுள்ள மும்பை மாடல் அழகி லீனா கபூர், ராப் தன்னுடன் மொத்தம் 15 முறை உறவு வைத்துக் கொண்டதாக புள்ளிவிவரத் தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆசாத் ராப். இவர் கிரிக்கெட் அம்பயர். இவர் மீது மும்பை காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார் மாடல் அழகியான லீனா கபூர். அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு பலமுறை பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி வந்தார் ராப். இப்போது அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் கூறியுள்ளார்.
லீனா கொடுத்த புகாரில், ராப் தன்னுடன் எத்தனை முறை உறவு வைத்துக் கொண்டார், எங்கெங்கு அது நடந்தது என்பதையும் புள்ளிவிவரத்துடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து லீனா கூறுகையில், இலங்கையில் 3 நாட்கள் நான் ராபுடன் இணைந்து ஒரே ஹோட்டல் அறையில், ஒரே பெட்டில் தங்கியிருந்தேன். அப்போது நாங்கள் மிகுந்த உணர்ச்சிகரமான உறவை வைத்துக் கொண்டோம்.
பின்னர் நான் மும்பை திரும்பியதும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் என்னைப் பார்க்க வந்திருந்தார் ராப். 7 நாட்கள் என்னுடைய லோகந்த்வாலா குடியிருப்பில் என்னுடன் தங்கினார். அப்போது 6 முறை உறவு வைத்துக் கொண்டார்.
பின்னர் ஐபிஎல் போட்டிகளின்போது புனேவில் நான்கு நாட்களும், டெல்லியில் 2 நாட்களும் என்னுடன் தங்கியிருந்தார். இந்த 6 நாட்களிலும் ஆறு முறை உறவு வைத்துக் கொண்டார். அதாவது தினசரி உறவு வைத்துக் கொண்டோம் என்று விலாவாரியாக கூறியுள்ளார் லீனா.
தானும், ஆசாத் ராபும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அத்தனை புகைப்படங்களும் ஏதோ ஒரு ஹோட்டல் ரூமில் எடுத்தது போலத் தெரிகிறது.
இதற்கிடையே, இந்தப் புகார்களை ஆசாத் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், லீனா கபூர் யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்கு நிறைய பெண் ரசிகர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் பல புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்துள்ளேன். இதைப் பயன்படுத்திக் கொண்டு லீனா என்னை பிளாக்மெயில் செய்ய முயற்சிக்கிறார், மலிவான விளம்பரத்தைத் தேடிக் கொள்ள முயல்கிறார். இதன் மூலம் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இடம் பெற அவர் முயல்வதாக நான் சந்தேகிக்கிறேன் என்றார்.

0 கருத்து:
கருத்துரையிடுக