என்னை யாராவது கொன்று விடுவார்கள், எனக்கு பயமாக இருக்கிறது என பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 வயது சிறுமி கூறியுள்ளார்.பாகிஸ்தானில் குரான் புத்தகத்தில் இருந்த பக்கங்களை கிழித்து எரித்ததாக 11 வயது கிறிஸ்துவ சிறுமி ரிம்ஸா மாஸி மீது
குற்றம் சாட்டப்பட்டது.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த முஸ்லிம் இமாம் காலித் ஜடூன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ரிம்ஸா வீட்டை முற்றுகையிட்டு மத நிந்தனை புகார் கூறியதை அடுத்து சிறுமி கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கின்படி சிறுமிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என்ற நிலையில், இமாம் போலியாக ஆதாரங்களை உருவாக்கி இருப்பதாக மற்றொரு முஸ்லிம் மத தலைவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து ரிம்ஸா விடுதலை செய்யப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அடையாளம் தெரியாத பகுதிக்கு பெற்றோருடன் கொண்டு செல்லப்பட்டார். அதன் பின் இமாம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சி.என்.என் பத்திரிகை நிருபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரிம்ஸாவுடன் பேசினார்.அப்போது தன்னை யாராவது எப்படியும் கொன்று விடுவர் என பயப்படுவதாக ரிம்ஸா மிரட்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் குரான் புத்தக பக்கங்களை எரிக்கவேயில்லை என அவர் மறுப்பு தெரிவித்தார்.ரிம்ஸாவின் வக்கீல் குறிப்பிடுகையில், சிறுமி மீது இமாமுக்கு விருப்பம், அதற்கு சிறுமி ஒத்துக் கொள்ளவில்லை.அதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக மத நிந்தனை குற்றச்சாட்டை அவர் சுமத்தி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

0 கருத்து:
கருத்துரையிடுக