புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட சகலத்தையும் பிரதி எடுத்ததுபோல போலி தயாரிப்புகளை உற்பத்தி செய்வது சீனாவுக்கு கைவந்த கலை
ஆகும்.இந்நிலையில் பிரிட்டன் மக்கள் விரும்பி புகைக்கும் சிகரெட்களில் மனித மலம், இறந்த பூச்சிகள், புழுதி மண் போன்றவை கலக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் சோதனையில் தெரியவந்துள்ளது.

இதுபோல தரக்குறைவான, ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும் போலி சிகரெட்கள் சீனாவில் தயாராகி முறைகேடான வகையில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமானது.பிரிட்டனில் போலி சிகரெட் புழக்கம் பற்றி அறிய பர்மிங்காம் நகரில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ். இன்டலிஜென்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு செய்தது.

இதில் 30.9 சதவீத சிகரெட்கள் போலி மற்றும் வெளிநாடுகளிலிருந்து முறைகேடாக எடுத்து வரப்படுகின்றன என்று தெரியவந்தது.
கடந்த ஆண்டில் இது 14.1 சதவீதம் மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் இரட்டிப்பாக உயர்ந்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தீவிர சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் மே வரை 13 ஆயிரம் போலி சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை சீனாவில் தயாராகி முறைகேடான வகையில், பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டவை ஆகும்.

அச்சு அசலாக ஒரிஜினல் சிகரெட் பாக்கெட் போலவே மிக நேர்த்தியாக இந்த போலி பாக்கெட்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பல ஆண்டுகள் புகைப்பவர்களால்கூட வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவை இருந்தன.
இதற்கிடையில், டெர்பிஷயர் உட்பட சில இடங்களில் கைப்பற்றப்பட்ட போலி, வெளிநாட்டு சிகரெட்களை எல்லை பாதுகாப்பு மற்றும் குடியேற்ற துறையான பார்டர் ஏஜென்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் ரசாயன பொருள், புழுதி மண், மனித மலம், இறந்த பூச்சிகள் போன்ற கழிவுகள் அந்த சிகரெட்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பொது இடத்தில் அள்ளிய குப்பையை புகையிலையுடன் கலந்து சிகரெட்களை உருவாக்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. சீனா உள்ளிட்ட கிழக்கு நாடுகளில் இருந்து போலி சிகரெட்கள் அதிகளவில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
இது போன்ற போலி சிகரெட்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல்நலத்தை கெடுக்கும். உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று சுகாதார துறை அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.
தரக்குறைவான வெளிநாட்டு சிகரெட், போலி சிகரெட்கள் நாட்டுக்குள் கடத்தப்படுகிறதா என்று கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top