புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஒரு அழகான, ஆரோக்கியமான உறவுகளுக்கு அடிப்படையானது நம்பிக்கை. ஒரு முறை அந்த நம்பிக்கை போய்விட்டால், மீண்டும் அந்த இடத்தில் நம்பிக்கை இருக்காது, சந்தேகம் தான் இருக்கும். மேலும் அவர்கள் என்ன செய்தாலும், அதில் ஒரு சந்தேகம் தோன்றும். ஆனால் இந்த சந்தேகம் சிலருக்கு தெரியாத வகையில் இருக்கும். ஆகவே தங்கள் வாழ்க்கை துணை சந்தேகப்படுகிறார்களா என்ற தெரிந்து கொள்ள ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று படித்து, அதை தெரிந்து கொண்டு, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்களேன்...
  • எப்போது எதை செய்தாலும். உங்கள் துணை உங்கள் பின்பற்ற நினைப்பார்கள். அதிலும் துணையுடன் வெளியே செல்லாமல் இருந்தால், அப்போது தொடர்ந்து போன் அல்லது மெசேஜ் என்று, நீங்கள் இப்போது இருக்கும் நிலவரத்தை தெரிந்து கொள்வதற்கு வந்து கொண்டிருக்கும். ஆனால் அதுவே உங்கள் துணை எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் இருந்தால், ஒரு முறை மட்டுமே வரும். மேலும் சந்தேகம் வந்த பின்பு, அவர்கள் அடிக்கடி போன் செய்யும் போது, சாரி, போர் அடிச்சது அதான் போன் பன்றேன் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அந்த இடத்தில் சந்தேகம் உள்ளது.
  •  சந்தேகம் வந்த பின்பு, துணைக்கு எந்த ஒரு சேம்பேறித்தனமும் ஏற்படாமல் காணப்படுவார்கள். இந்த சந்தேகம் நம்பிக்கையின்மை மற்றும் சரியான பாதுகாப்பு இல்லாததாலும் தான் வருகிறது. அதனால் தான், உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் தொடர்ந்து கவனிக்கின்றனர்.
  •  எப்போதெல்லாம் எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் துணை உங்களுடனேயே இருக்கிறார்களோ, அப்போது அவர்கள் உங்கள் மீதும், உங்களின் விசுவாசம் மீதும் சந்தேகப்படுகின்றனர் என்று அர்த்தம்.
  • முக்கியமாக உங்களை உங்களது நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து பிரிப்பார்கள். அதிலும் வேறு பாலினம் என்றால் சொல்லவே வேண்டாம். உடனேயே ஆக்சன் தான்.
  • சந்தேகப்படுபவரை எப்படி புரிய வைப்பது?
  1. முதலில் உங்கள் துணையிடம் தெளிவாக பேச வேண்டும். அவர்கள் பிரச்சனையை கொண்டு வரும் போது எந்த ஒரு கோபமும் படாமல், அமைதியாக பேச வேண்டும். அதற்கான காரணத்தை சொல்லி, புரிய வைக்க வேண்டும்.
  2. உங்கள் துணை சந்தேகப்படுகிறார்கள் என்று தெரிந்தால், அனைத்தையும் அவர்கள் கேட்கும் முன்பே சொல்லிவிடுங்கள். இதனால், அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை மற்றும் நீங்கள் எதையும் மறைக்கவில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
  3. சந்தேகம் வேறு எங்கிருந்தும் வரவில்லை. அதற்கு கண்டிப்பாக ஏதேனும் காரணம் இருக்கும். அது கடந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதேனும் ஒரு தவறின் காரணமாக இருக்கலாம். அந்த காரணத்தினால் தான் இவை நடக்கிறது. எனவே அதனைப் பற்றி, அவர்களிடம் தெளிவாக பேசி, உங்கள் அன்பை வெளிப்படுத்தி, உறவுகளை இன்னும் வலுப்படுத்தலாம்.
மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், வாழ்க்கை நன்கு மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்கும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top