ரஷ்யாவில் இஷ்கெவ்ஸ்க் மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற 14 வயது சிறுமி கைது செய்யப்பட்டாள்.
இஷ்கெவ்ஸ்க் மாகாணம் உரால்ஸ் நகரில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் இந்த சிறுமி வெள்ளைநிற முகமூடி அணிந்து நுழைந்தாள்.
திடீரென அங்கிருந்த பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றாள்.
உடனே அங்கு நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவளை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவள் எனக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வேண்டும் என்று கூச்சலிட்டாள்.
இதன் பின்னர் பொலிஸாரிடம் அச்சிறுமி ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவர்கள் நடத்திய விசாரணையில் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்ய பணம் தேவைப்படுகிறது என்றும் அதற்காகவே நான் கொள்ளையடிக்க முயன்றேன் என தெரிவித்தாள்.
சிறுமியின் பின்னணி: சிறுமியின் தாயார் விவாகரத்து செய்த பின்னர், வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் தன்னை அவர் கொடுமை படுத்துவதாகவும் இதன் காரணமாக தற்கொலைக்கு முயல்வதாகவும் அச்சிறுமி கூறினாள்.
தற்போது பொலிஸாரின் பாதுகாவலில் இருக்கும் இச்சிறுமி விசாரணை முடியும் வரை உரால்ஸ் நகரை விட்டு வெளியேற கூடாது என்ற நிபந்தனையுடன் பொலிஸார் அவளை விடுவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக