புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சங்கரன்கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் ஆசிரியைகளை செல்போனில் படம்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியம் திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வரலாற்று பிரிவு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் ஆசிரியைகளை கேலி செய்ததுடன், அவர்களை செல்போனிலும் படம் பிடித்து அத்துமீறி நடந்து கொண்டனர். இது குறித்து ஆசிரியைகள் அளித்த புகாரின்பேரில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கடந்த 5ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 மாணவர்களும் பள்ளிக்கு வந்து சக மாணவர்களுடன் சேர்ந்து மீண்டும் ஆசிரியைகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். இது குறி்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகள், உதவி தலைமை ஆசிரியை ஆனி ஜோஸ்லின் ஆகியோர் பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் முறையிட்டதன்பேரில் நேற்று முன்தினம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளி தொடங்கியதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 11 மாணவர்களும் அங்கு வந்து தங்கள் துறையைச் சேர்ந்த 36 மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க அழைத்துச் சென்றனர்.

இதனிடையே திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் டோரா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் உதவி தலைமை ஆசிரியை ஆனி ஜோஸ்லின் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.

1 கருத்து:

 
Top