யாழ்ப்பாணம்,காரைநகர் கசூரினாக் கடற்கரையில் தொடரும் கலாசாரச் சீரழிவுகள். இப்படி பல தடவை எமக்கு வந்த செய்திகள் அதிகம் அதில் புகைப்படம் காணொளிகள் என பலதும் பத்துமாக வந்தவண்ணமே இருக்கின்றது.
நாங்கள் நாகரீகம் கருதி வெளியிட முடியாதவண்ணம் தவிக்கின்றோம். எனினும் இந்தப்படத்தை கட்டாயம் வெளியிடுங்கள் என்று சமுக அக்கறையாளர்கள் தந்துள்ளனர். இதை வெளியிட முடியாது விட்டால் இதற்கு நீங்கள் உடந்தை என்று அர்த்தம் என்று எச்சரிக்கையாகவும் ஊடகத்தின் கவனத்தை எடுக்கவேண்டும் என்றும் கவலை தரும் வண்ணமாக செய்திகள் தந்துள்ளனர். அங்கு நடப்பது தான் என்ன..?
காமக்களியாட்டமாக நடக்கின்றது. அங்குள்ள பற்றை புதர்களில் பதுங்கி புதிய காதலர்கள் என்றும் விபச்சார விலை மாதர்கள் இரகசிய உணர்வாடல்களாளர்கள் என பன் முகமாக ஆசைகளால் எமது நாட்டை சிதைக்கின்றனர்.
எத்தனை அவலம்..? அந்த வகையில் தான்.. பெண்கள் பொது இடத்தில் வைத்து ஆடைகள் மாற்றுதல் மேலைநாட்டு கலாச்சாரம் போன்றவற்றை எமது கலாச்சாரத்துக்கு மாறாக செயற்படும் அவலம் ,காரைநகர் கசூரினாக் கடற்கரையில் இடம் பெற்றுக்கொண்டே இருக்கின்றது. இப்படி பல செய்திகளால் நாங்கள் நொந்து வெந்து விடுகின்றோம். இந்த அவலம் நிழலாக எங்கள் கலாச்சார கோபச்சீற்றம் காரணத்தால் தான் வெளியிடுகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.!
எப்படி இருந்த யாழ்பாணம் இன்று இப்படியாகியது தான் இன்றய காலத்தின் நிர்வாண நிலை.
0 கருத்து:
கருத்துரையிடுக