இங்கிலாந்துப் பள்ளியில் பணியாற்றி வரும் ஒரு பெண் ஊழியர், சிறு வயது மாணவர்களை மயக்கி அவர்களுடன் உறவு கொண்டு சிக்கியுள்ளார். அவருக்கு அடுத்த மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படவுள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் எம்மா வெப், 41 வயதாகிறது. இவரது கணவர் பெயர் ஆண்டி. இவர் பிளம்பராக உள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
எம்மா வெப், பெர்க்ஷயரில் உள்ள ஒரு பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சிறார்களை மயக்கி உறவு கொண்டு அவர்களை சீரழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தான் வேலை பார்த்து வந்த பள்ளியில் படிக்கும் 3 மாணவர்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி உறவு கொண்டார் என்பதுதான் எம்மா மீதான புகாராகும்.
இவர் 15 வயது முதல் 17 வயது வரையிலான 3 மாணவர்களை மயக்கி உறவு வைத்திருந்தார். அதில் ஒரு மாணவனுடன் மட்டும் 12 முறை உறவு கொண்டுள்ளார். மற்ற இருவரையும் கூட இவர் பலமுறை தவறான செயல்களுக்குப் பயன்படுத்தியுள்ளார்.
மேலும் தான் உறவில் ஈடுபட்டபோது எடுத்த படங்களை அந்த மாணவர்களுக்கு அனுப்பி வைத்தும் அவர்களது மனதைக் கலைத்துள்ளார் இந்தப் பெண்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து எம்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து கைதானார். தற்போது ஜாமீ்னில் உள்ளார். அவர் மீது மொத்தம் 16 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக