புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவில் மன வளர்ச்சி குறைந்த குழந்தையுடன் வந்த பெற்றோருக்கு, விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அமெரிக்காவின் போர்டர்வில்லி பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட்
வான்டர்ஹோஸ்ட், இவரது மனைவி ஜோன். இவர்களுக்கு 16 வயதில் பீட் என்ற மகன் உள்ளான்.இவர்கள் அனைவரும் நெவார்க் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல் செல்ல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானத்தில் செல்ல விமானநிலையம் வந்த அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிறுவன் பீட் மனவளர்ச்சி குன்றியவன் என்பதை அறிந்து, அவர்களை விமானத்தில் செல்ல அனுமதி மறுத்தனர்.விமானத்தில் சிறுவன் செல்வதால் மற்ற பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கூறி அவர்களது பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.இதற்கு ராபர்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். எனினும் கடைசி வரை அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் வேறு விமானத்தில் செல்ல அவர்கள் டிக்கெட் எடுத்தனர்.

இதுகுறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் மட் மில்லர் கூறுகையில், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் அந்த சிறுவன் அங்கும் இங்கும் தாறுமாறாக ஓடினான். அவனது நடவடிக்கைகள் சரியில்லை.மேலும், விமானத்தில் செல்ல அவன் அடம்பிடித்தான். இதனால் அனுமதி மறுக்கப்பட்டது என்றார்.இந்த குற்றச்சாட்டை மறுத்த ராபர்ட் கூறுகையில், என் மகன் எப்போதும் ஓடியதில்லை. கூச்சல் போட்டதில்லை. என் பக்கத்தில்தான் அமைதியாக உட்கார்ந்திருந்தான் என்றார்.

அதற்கு ஆதாரமாக சிறுவனின் தாய், செல்போனில் எடுத்த வீடியோவை காட்டினார். அதில், சிறுவன் பீட் அமைதியாக உட்கார்ந்திருப்பது பதிவாகி இருந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top