பெற்றோரை எதிர்த்து பதிவு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாகிஸ்தான் நீதிமன்ற வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சர்கோடா மாவட்டத்தில்
வசிக்கும் நசீர் அவான்(வயது 21) என்ற இளைஞர் உறவு பெண்ணான யாஸ்மின்(வயது 19) என்பவரை காதலித்து வந்தார்.
அவானின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோடா நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் அவானும், யாஸ்மினும், பதிவு திருமணம் செய்யச் சென்றனர்.அப்போது அவான் நீதிபதியிடம், என் பெற்றோர் இந்த திருமணத்தை விரும்பவில்லை. அவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்தார்.
பதிவு திருமணம் முடிந்ததும் இருவரும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு உறவினர்களுடன் வந்த யாஸ்மினின் சித்தப்பா பரூக் அவான் புதுமணத் தம்பதியை சுட்டுக் கொன்றார்.நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் பரூக்கை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரூக் கூறுகையில், யாஸ்மினால் குடும்ப கௌரவம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவரையும் சுட்டுக் கொன்றேன் என்றார்.

0 கருத்து:
கருத்துரையிடுக