பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைகளை கருணை கொலை செய்ய ராஜஸ்தான் மாநில அரசிடம் பெற்றோர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே உள்ள சல்லாடா கிராமத்தை சேர்ந்த
கணேஷ்லால், மனைவி ரமீலா தேவி தம்பதிக்கு பூமிகா 8 என்ற மகளும் டனிஷ் 4 என்ற மகனும் உள்ளனர்.
இந்த 2 குழந்தைகளும் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர். ஆனால் இவர்களுக்கு 2 வயதான போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் உடல் உறுப்புகள் செயல் இழந்ததையடுத்து தனது தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு இந்த குழந்தைகள் தள்ளப்பட்டார்கள்.
கூலித்தொழிலாளர்களான இந்த தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு அனைத்து சொத்துக்களையும் விற்று மருத்துவம் செய்தனர். ஆனால் குழந்தைகள் குணமடைந்ததாக தெரிய வில்லை.
இந்நிலையில் தனது 2 குழந்தைகளையும் கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அரசிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கணேஷ்லாலும், அவரது மனைவி ரமீலா தேவியும் மாவட்ட கலெக்டருக்கு மனு செய்துள்ளனர்.இது குறித்து தாய் ரமீலா தேவி கூறியதாவது: பூமிகா, டனிஷ் இருவருக்கும் 2 வயதான போது கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியது.
அன்றாடம் கூலி வேலைக்கு போய் சம்பாதிக்கும் நாங்கள் எங்களால் இயன்றவரை மருத்துவம் பார்த்தோம். ஆனால் பயன் இல்லை.
யாராவது பண உதவி செய்வார்கள் என்று முயற்சித்து பார்த்தும் எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
உதய்பூரில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்க்கவும், போக்குவரத்து சாப்பாட்டு செலவுகளுக்கு கூட தற்போது எங்களிடம் வசதி இல்லை.
படுத்த படுக்கையாக என் குழந்தைகள் படும் வேதனையை பார்க்க சகிக்க முடியவில்லை. அதனால்தான் அவர்களை கருணை கொலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கண்ணீர் மல்க ரமீலா தேவி கூறினார்.

0 கருத்து:
கருத்துரையிடுக