ஹெட் போனை மாட்டியபடி நித்திரைக்கு சென்ற இளைஞன் அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்ட விபரீதம் கல்முனையில் உள்ள நற்பிட்டிமுனைக் கிராமத்தில் இடம்பெற்று உள்ளது.24 வயது உடைய அஹமட் லெப்பை ரிப்னாஸ் என்பவரே இரு காதுகளில் இருந்தும் இரத்தம் வெளியேறி இருந்த
நிலையில் நேற்று காலை உயிரிழந்து காணப்பட்டு உள்ளார்.
இவர் மடிக் கணினியில் ஹெட்போனுக்கு இணைப்புக் கொடுத்து பாடல்களை புதன்கிழமை இரவு செவிமடுத்து இருக்கின்றார். பின் அப்படியே தூங்கிப் போய் விட்டார்.அன்று இரவு பல தடவைகளில் மின்சாரம் தடைப்பட்டு தடைப்பட்டு மீண்டும் மீண்டும் வந்து இருக்கின்றது. இதனால் இளைஞனின் செவிப் பறை வெடித்து உள்ளது என சந்தேகிக்கப்படுகின்றது.
மறுநாள் காலையில் உறவினர்கள் அறைக்கு சென்றபோதுதான் இளைஞனை உயிரிழந்த நிலையில் கண்டார்கள்.இளைஞன் கல்முனை கொமர்ஷல் வங்கியில் காப்புறுதி உதவியாளராக கடமை ஆற்றி இருக்கின்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக